தமிழக பா.ஜ.க-வின் அடுத்த தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பட்டியலில் பி.டி.அரசகுமார் பெயரும் இடம் பெற்று இருந்தது. பாஜக மாநிலத் துணைத்தலைவராக இருந்த அவர் கடந்த 1ம் தேதி புதுக்கோட்டையில் நடந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொண்டார். அங்கு பேசுகையில், `தமிழக முதல்வராக விரைவில் ஸ்டாலின் பொறுப்பேற்பார்' என்று ஸ்டாலின் முன்னிலையிலேயே பேசியது பா.ஜ.க வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தமிழக பா.ஜ.க-வில் குரல் எழுந்தது. இதனையடுத்து பாஜக தேசிய தலைமைக்கு பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பாஜக நிர்வாகிகள் கடிதம் அனுப்பினர். அதில் தேசிய தலைமை பதில் அளிக்கும் வரை பி.டி.அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் அவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.