மதுரையில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இன்று காலை 10 மணி அளவில் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர் அனுமதி இல்லாத காரணத்தால் போலீசார் காந்தி மியூசியம் அருகிலேயே தடுத்து நிறுத்தினர். 

 

உடனே பேரணியாக வந்தவர்கள்  பிஜேபி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்,  பின்னர்  குடியுரிமைச் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் அதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டனர்.   பேரணியில் வந்தவர்களில்  திடீரென்று ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி உடலில் தீ வைக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டு மருத்துவமனை அனுப்பினர், மேலும் ஒருவர் பேரணியில் மயக்கமடைந்ததால் அவரை உடன் இருந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர் ,  இதனால்மேலும் பதட்டமான சூழ்நிலை உருவானது.   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் சாலைகள் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.