குடியுரிமை சட்ட போராட்டங்களை ஒடுக்கிய கொரோனா..! காலவரையின்றி ஒத்திவைப்பு..!
தேசிய பேரிடராக கொரோனா வைரஸ் அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் வரும் காலங்களில் என்.பி.ஆர் நடைமுறைபடுத்தப்பட்டால் அதற்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வந்தது. குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அதனால் அதை அமல்படுத்த கூடாது எனவும் பல்வேறு அமைப்பினரும் அதற்கு எதிராக போராட்டம் நடத்தினர். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டிலும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி 6500 பலியாகி இருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்துள்ளது. பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
என் அழகின் ரகசியம் என்ன தெரியுமா..? கட்சிக் கூட்டத்தில் கலகலத்த குஷ்பு..!
இந்த நிலையில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு போராட்டங்களை தற்காலிகமாக முடித்துக்கொள்வதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. தமிழ் நாடு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவில், தேசிய பேரிடராக கொரோனா வைரஸ் அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் வரும் காலங்களில் என்.பி.ஆர் நடைமுறைபடுத்தப்பட்டால் அதற்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகத்தில் சென்று புளியமரத்தில் பயங்கரமாக மோதிய கார்..! இருபெண்கள் உடல் நசுங்கி பலி..!