Asianet News TamilAsianet News Tamil

அதிக மதிப்பெண்கள் வழங்க தனியார் பள்ளிகள் திட்டம்..அமைச்சர் கடும் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக கல்விதுறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால் இதை கல்வியமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Private schools plan to give higher marks
Author
Tamilnadu, First Published Jun 19, 2020, 8:02 PM IST

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக கல்விதுறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால் இதை கல்வியமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Private schools plan to give higher marks

பத்தாம் வகுப்பை தொடர்ந்து  11ம் வகுப்பிற்கான விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், வருகை பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவேடுக்கு 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட இருக்கிறது.இதற்காக மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை அனுப்பும்படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது கல்வித்துறை.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி  அடைந்திருக்கிறார்கள். இந்தாண்டு 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பதாலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண் எடுத்திருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். இதேபோல் 11ம் வகுப்பிலும் வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும்புவியியல் பாடங்களில், காலாண்டு அரையாண்டில் எத்தனை மதிப்பெண் பெற்றாலும் தேர்ச்சி என அறிவித்துள்ளார்.

Private schools plan to give higher marks

இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட முன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லை என்ற தகவலும் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது தெரியாததால் தனியார் பள்ளிகள் மீண்டும் காலாண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்துவதாகவும் அதில் அதிகமதிப்பெண் வழங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது.இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் பற்றி தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios