Asianet News TamilAsianet News Tamil

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்களுக்கே முன்னுரிமையா..? சுயேட்சைகள் செல்லாக்காசா..?

அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுவில் பல குறைகள் இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படுவதை நேருக்கு நேராக இருந்து தெரிந்து கொண்டேன்.

Priority is given to the candidates of the recognized party ..? Independents Cellacca
Author
Tamil Nadu, First Published Mar 22, 2021, 6:13 PM IST

சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது. அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்தனர்.

கடந்த வெள்ளி (மார்ச் 19) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. ஏழாயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி இன்றுடன் முடிவடைந்தது.Priority is given to the candidates of the recognized party ..? Independents Cellacca

முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 25 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி நாயக்கனூர் தொகுதியில் 33 பேர் போட்டியிடுகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 41 பேரும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனின் கோவில்பட்டி தொகுதியில் 19 பேரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் 19 பேரும், 
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருவொற்றியூர் தொகுதியில் 24 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிகபட்சமாக கரூரில் 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சுயேட்சையாக மட்டும் 59 பேர் போட்டியிடுகின்றனர். இன்றைய நிலவரப்படி, மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட ஏழாயிரத்து 255 மனுக்களில் இரண்டாயிரத்து 171 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவாயிரத்து 663 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. ஆனாலும், அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் மனுவில் சில பல குறைகள் இருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்கிற தேர்தல் அலுவலர்கள், சுயேட்சை வேட்பாளர்களின் மனுவில் சில குறைகள் இருப்பதாகக்கூறி தள்ளுபடி செய்து விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. Priority is given to the candidates of the recognized party ..? Independents Cellacca

இதுகுறித்து விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த முத்துவேல் கூறுகையில், ‘’எனது படிவங்கள் அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு, முறையாக தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும், அக்னாலெஜ்ச்மெண்ட் படிவத்தில் சில கோப்புகளை சரி செய்ய வேண்டும் என தேர்தல் அலுவலர் கொடுத்திருந்தார். அதையும் முறையாக ஒப்படைத்தேன். எல்லாம் சரி என்று சொன்னவர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலின் போது என்னை முன் மொழிந்த வாக்காளர்கள் பட்டியலில் 10 பேரில் ஒருவர் இந்தத் தொகுதியில் இல்லை எனக்கூறி எனது வேட்பு மனுவை நிராகரித்துள்ளார்கள். அக்ணாலெட்ஜ்மெண்ட் கொடுத்த பட்டியலில் இதனை சரி செய்ய வேண்டும் எனக் கேட்டு இருந்தால் கொடுத்திருப்பேன். Priority is given to the candidates of the recognized party ..? Independents Cellacca

10 பேர் கொண்டு முன் மொழிந்த வாக்காளர்களின் பட்டியலில் ஒருவரது பெயர் தவறாக கொடுத்ததுக்காக எனது பெயரை தேர்தல் ஆணையம் நிராரகரித்துள்ளதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கு பதிலாக கடந்த வெள்ளிக்கிழமையே மாற்று வாக்காளர்களின் பெயரை பட்டியலில் இணைக்க்கோரி இருந்தேன். அதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுவில் பல குறைகள் இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படுவதை நேருக்கு நேராக இருந்து தெரிந்து கொண்டேன். இது தான் ஜனநாயகத்தின் மாண்பா?’ எனக் கேள்விக்கணைகளை அடுக்கினார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios