Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் வீட்டு வசதி திட்டம்(PMAY): பிரதமர் மோடி பாராட்டிய வீட்டுவசதி நிதி நிறுவனம் எது தெரியுமா..?

2லட்சம் வாடிக்கையாளர்கள், 47ஆயிரம் கோடி கடன், 4ஆயிரத்து700 கோடி பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் மானியம் என வாங்கி கொடுத்து  வீட்டு வசதி நிதி நிறுவனங்களிடையே முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் முதன்மையான வீட்டு வசதி நிறுவனமான ஹெச்டிஎப்சி.(Housing Development Finance corporation).
 

Prime Minister's Housing Scheme (PMAY): Do you know which housing finance company praised by Prime Minister Modi
Author
India, First Published Sep 8, 2020, 9:20 PM IST

2லட்சம் வாடிக்கையாளர்கள், 47ஆயிரம் கோடி கடன், 4ஆயிரத்து700 கோடி பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் மானியம் என வாங்கி கொடுத்து வீட்டு வசதி நிறுவனங்களிடையே முதல் இடத்தை பிடித்துள்ளது இந்தியாவின் முதன்மையான வீட்டு வசதி நிறுவனமான ஹெச்டிஎப்சி.(Housing Development Finance corporation).

Prime Minister's Housing Scheme (PMAY): Do you know which housing finance company praised by Prime Minister Modi


தமிழகத்தில் மதுரை, கோயம்புத்தூர், சென்னை ஆகிய ஊர்களில் மூன்று மண்டலங்களாக ஹெச்டிஎப்சி வீட்டு வசதி நிறுவனம் இயங்கி வருகிறது.வருமான வரி செலுத்துவோர் மற்றும் சிறு தொழில்கள் நடத்துபவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வீட்டுக்கடன் வழங்கி வாடிக்கையாளரின் வீடு கனவை நிறைவு செய்து வருகிறது.இந்தியா முழுவதும் 585க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் லண்டன், துபாய், சிங்கப்பூர் குவைத், ஓமான், கத்தார் ஷார்ஜா, அபுதாபி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுவசதி நிதி சேவையை செய்து வருகிறது.
 
Pradhan Mantri Awas Yojana (PMAY) என்ற இத்திட்டம் ஜூன் 1, 2015 ஆம் நாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு நகரங்கள் மற்றும் கிராமங்களில் குறைந்த விலையில் மலிவான வீடுகளை கொடுப்பதே PMAY எனப்படும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Prime Minister's Housing Scheme (PMAY): Do you know which housing finance company praised by Prime Minister Modi

 மார்ச் 31, 2022 க்குள் "அனைவருக்கும் வீடு" வழங்குவதும் 2 கோடி வீடுகளை கட்டுவதும் இதன் நோக்கமாகும்.
வாடகை வீட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் ஆசை, சொந்தமாக ஒரு வீடு வாங்குவதுதான். சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டமே "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்". இந்தத் திட்டத்தின்கீழ் வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி,  என இந்தியா முழுவதும் வீடு கட்டுபவர்களுக்கு புதிய வீடு வாங்குபவர்களுக்கு இந்த வட்டி மானியம் வழங்கப்படுகிறது. வீட்டுக்கான உரிமையில் குடும்பத்தலைவிக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டுமென்பதை உறுதிப்படுத்தும்விதமாக இந்தத் திட்டத்தின் விதிமுறைகள் இருக்கின்றன. 

விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், வீட்டு விலை, வீட்டின் பரப்பளவு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்படும் வீட்டை நான்காகப் பிரித்துள்ளார்கள். ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS); ஆண்டு வருமானம் 6 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை குறைந்த வருவாயுள்ள பிரிவினர் (LIG); ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை நடுத்தர வருவாயுள்ள பிரிவினர் 1 (MIG I); ஆண்டு வருமானம் 18 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை நடுத்தர வருவாயுள்ள பிரிவினர் 2 (MIG II) என்று பிரித்துள்ளனர்.

Prime Minister's Housing Scheme (PMAY): Do you know which housing finance company praised by Prime Minister Modi

2022ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் 3 கோடி வீடுகளும், நகர்ப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கட்டித் தருவது என்று முடிவு செய்தோம். இது பெரிய இலக்கு என்பதால்,  அதற்கான செலவும் மிக அதிகம் என்பது இயல்பே. ஒரு காலத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்ப திட்டங்கள், இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதுண்டு.7 லட்சம் வீடுகள் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்பட்டுள்ளன.வீடு கட்டுவதற்கு பல்வேறு வங்கிகள் கடனுதவி வழங்கி வருகின்றன.இதில் ஹெச்டிஎப்சி நிதிநிறுவனம் இந்தியா முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி வழங்கி வீடு கட்ட வைத்திருக்கிறார்கள்.இதற்காக பிரதமர் மோடி விருது வழங்கி அந்த நிதி நிறுவனத்தின் சேவையை பாராட்டியிருக்கிறார்.

வீடு இல்லாதவர்கள் முதன்முறையாக வீடு கட்டும் போது அவர்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.இந்தியா முழுவதும் 2லட்சம் வாடிக்கையாளர்களுக்கு 47ஆயிரம் கோடி வீட்டுக்கடன்கள் வழங்கி 4700 கோடிக்கு அதிகமான மானியத்தை வழங்கி சாதனை படைத்துள்ளது ஹெச்டிஎப்சி.Pradhan Mantri Awas Yojana (PMAY) என்ற இத்திட்டத்தின் சலுகைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த நிதி நிறுவனங்களில் முதன்மையான இடத்தையும் ஹெச்டிஎப்சி வங்கி இடம் பிடித்துள்ளது. 2018 , 2019ம் ஆண்டிற்கான EWS LIG MIG 1&2 பிரிவில் வீடற்றவர்களுக்கு வட்டி மானியத்திற்காக வழங்கப்பட்ட கடன்களில் ஹெச்டிஎப்சி முதலிடம் பிடித்துள்ளதால் பிரதமர் மோடி "சிறந்த தனியார் துறை நிதி நிறுவனம்" என பாராட்டி விருது வழங்கி கவுரப்படுத்தியிருக்கிறார்.

Prime Minister's Housing Scheme (PMAY): Do you know which housing finance company praised by Prime Minister Modi


ஹெச்டிஎப்சி நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு கடன் வழங்கும் போது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வட்டிமானியம் வழங்குவதற்கு தனியாக அதற்கென்று ஒரு பிரிவை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அந்த பணத்தை மத்திய அரசிடம் இருந்து வாங்கி வாடிக்கையாளர் கணக்கில் விரைந்து வரவு வைத்து அவர்களின் கடன் சுமையை குறைத்து வருகிறது.இத்திட்டத்தின் கீழ் பெரும் சலுகைகள் வீட்டுக்கடன்களுக்கான வரி சலுகைகள் மிகக் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் சொத்து விலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் முன் எப்போதும் இல்லாத வகையில் வழங்கப்பட்டுள்ளது. 

Prime Minister's Housing Scheme (PMAY): Do you know which housing finance company praised by Prime Minister Modi


ஹெச்டிஎப்சி நிதிநிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரேணு சுத் கர்னாட் பேசும் போது.." மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற நமது ஒட்டுமொத்த தத்துவத்திற்கும் ஏற்ப உள்ளது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் உட்பட பல துறைகள்  பாதிக்கப்பட்டுள்ளன.இந்த கடினமான காலகட்டத்தில் இருந்து பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது.இதனால் வீட்டு வசதிக்கான தேவை படிப்படியாக அதிகரிக்கும். என்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios