இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்க  வேண்டுமா...? வேண்டாமா...? என்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் வீடியோகான்பிரன்சிங் மூலம்  பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டறிந்தார். 

21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஊரடங்கு நீட்டிப்பது குறித்த தகவல்கள் அதில் இடம் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,இந்நிலையில் இந்தியாவை தாக்கத் தொடங்கியுள்ள இந்த வைரஸ், மெல்ல மெல்ல வேகம் எடுத்த அதன் தீவிரத்தை காட்டி வருகிறது, இதுவரையில் 9,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, நாடு முழுவதும் 331 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,080 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சுமார் 7,794 பேருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது முன்னதா இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாள் மட்டுமே நாட்டு மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் , அதன்படி மக்கள் ஒரு நாள் ஊரடங்கு கடைப்பிடித்தனர் . 

இதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் , அடுத்த 21 நாடுகளுக்கு ஆதாவது ஏப்ரல் 14ம் தேதிவரை நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவித்தார்.இந்நிலையில் 21 நாடுகள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. முன்னதாக நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இரண்டுமுறை உரையாற்றினார் அதில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்னணியில் உள்ள மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாட்டு மக்கள் கரவொலி எழுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தார் , அதனையடுத்து இரண்டாவது முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் , ஏப்ரல் 9ஆம் தேதி இரவு அனைத்து வீடுகளிலும் ஒளியேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டுமென கேட்டிருந்தார் , அவர் வைத்த இரண்டு கோரிக்கைகளுக்கும் மக்கள் பேராதரவு வழங்கினார் . இந்நிலையில் நாளையுடன் தேசிய ஊரடங்கு நிறைவடைய உள்ளது . ஆனாலும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுப்பாட்டுகுள் வரவில்லை , எனவே ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது,

இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா...? வேண்டாமா...? என்பது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் வீடியோகான்பிரன்சிங் மூலம் பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது பல்வேறு மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர் . இந்நிலையில் பீகார் , பஞ்சாப் , தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளனர். ஆனால் தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளதால், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை காலை அவர் உரையாற்றும்போது ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது . இந்நிலையில் அடுத்த 14 நாட்களுக்குள் அதாவது ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது .