நாடுமுழுவதும்  மே-3 ஆம்  தேதி வரை ஊரடங்கை நீட்டித்து  பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் ,  தொலைக்காட்சி வாயிலாக  சுமார் 20 நிமிடங்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர் ,  கொரோனா வைரசை எதிர்த்து நாம் நடத்திய ஊரடங்கின் மூலம்  நாட்டிற்கு வந்த மிக்பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்,  வரும் வாரம் கொரனா தடுப்பு நடவடிக்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தாக  இருக்கும் என அவர் கூறினார்.  இதுவரை மத்திய அரசு அறிவித்த  ஊரடங்கை மக்கள் பின்பற்றியதற்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார் ,  சரியான நேரத்தில் ஊரடங்கை இந்தியா கடைபிடித்ததின் மூலம் நாட்டிற்கு வந்த  மிகப் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது ,  ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படாமல் போயிருந்தால்  கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை இந்தியா சந்தித்து இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடியதன் மூலம் இது சாத்தியமடைந்துள்ளது என்றார்.   தற்போது எதிர் வரும் வாரங்களில்  நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.  இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து  நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் என்றார்.  இந்த ஊரடங்கு மூலம் மக்கள் சந்தித்து வரும் இன்னல்களை நான் நன்கு அறிந்திருக்கிறேன் ,  ஆனாலும் இது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது .   அதேபோல்  பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் .  ஏப்ரல் 20க்குப்  பின்னர்  கொரோனா தாக்கத்தை ஆராய்ந்த பின்னர்  ஏழை எளிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்ற அவர், அப்போதும்  ஊரடங்கு உத்தரவுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்,  அதை மீறி இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால்  மக்களுக்கு அளிக்கப்படும் தளர்வுகள் நீக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்தார்.

மக்கள் முக கவசங்களை தேடி அலையத்தேவையில்லை என்ற அவர் அதை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம் என அவர் கூறினார் ,  arogya setu செயலியை போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் என அவர் கூறினார்.  கொரோனாவுக்கு எதிரான இந்த ஊரடங்கு ஒரு போருக்கு சமமானது என கூறிய அவர்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளன என அவர் பாராட்டினார் . ஊரடங்கு நேரத்தில் ஊழியர்களை  யாரும் பணியிலிருந்து நீக்க வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார் .  நாட்டு மக்கள் ஊரடங்கு உத்தரவை முழுவதுமாக கடைப்பிடித்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றியுள்ளனர் என அவர் மக்களை வெகுவாக பாராட்டினார் .  ஏற்கனவே 9 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்த ஊரடங்கு அறிவித்துள்ளார்  என்பது குறிப்பிடதக்கது.  உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , இந்நிலையில் இந்தியாவை தாக்கத் தொடங்கியுள்ள இந்த வைரஸ்,  மெல்ல மெல்ல வேகம் எடுத்த அதன் தீவிரத்தை காட்டி வருகிறது,

இதுவரையில் 10,453  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,  நாடு முழுவதும் 358    பேர் உயிரிழந்துள்ளனர்.   கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது முன்னதா இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த  பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாள் மட்டுமே நாட்டு மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் , அதன்படி மக்கள் ஒரு நாள் ஊரடங்கு கடைப்பிடித்தனர் இதன் பின்னர்  கடந்த மார்ச் மாதம் , அடுத்த 21 நாடுகளுக்கு ஆதாவது ஏப்ரல்  14ம் தேதிவரை  நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அவர் அறிவித்தார். இந்நிலையில் 21 நாடுகள் ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.  முன்னதாக  நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இரண்டுமுறை உரையாற்றினார்  அதில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்னணியில் உள்ள மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாட்டு மக்கள் கரவொலி எழுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தார் ,

 அதனையடுத்து  இரண்டாவது முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் ,  ஏப்ரல்  9ஆம் தேதி இரவு அனைத்து வீடுகளிலும் ஒளியேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டுமென கேட்டிருந்தார் , அவர் வைத்த இரண்டு கோரிக்கைகளுக்கும்  மக்கள் பேராதரவு வழங்கினார் . இந்நிலையில்  நாட்டு மக்களுக்கு நான்காவதுமுறையாக இன்று உரையாற்றிய அவர்,  இன்றுடன் தேசிய ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ,  அதாவது மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கை  நீட்டித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.