Asianet News TamilAsianet News Tamil

கொரோனா வைரசை எண்ணி அஞ்ச வேண்டாம்...!! மக்களுக்கு ஆறுதல் சொன்ன மோடி , குறிப்பிட்ட அந்த விஷயம்..!!

சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . 
 

prime minister modi  advice to public regarding corona virus
Author
Chennai, First Published Mar 13, 2020, 3:55 PM IST

கொரோனா வைரஸ்  தொற்றால் பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை என பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார் .  இந்த வைரஸால் இந்தியாவில்  74 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி இவ்வாறு கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  சுமார் நூற்றுக்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.  உலக அளவில் இந்த வைரசுக்கு சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . 

prime minister modi  advice to public regarding corona virus

நேற்று முன்தினம் வரை 60 பேருக்கு நோய்த்தொற்று இருந்த நிலையில் ,  நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது மகாராஷ்டிராவில் 13 பேருக்கும்  டெல்லி லடாக்கில்  தலா ஒருவருக்கும் அதேபோல் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கும் இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது .  தமிழகத்தில் ஒருவரும் கேரளாவில் 4 பேர் மட்டுமே இதிலிருந்து குணமடைந்துள்ளனர் .

prime minister modi  advice to public regarding corona virus

மற்றவர்களுக்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ஆயிரக்கணக்கானோர் வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி கொரோனா  குறித்து  யாரும் பீதியடைய வேண்டாம் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி உள்ளார் .  இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  அனைத்து 

அமைச்சர்களும் மாநில அரசுகளும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இதன் நடவடிக்கையாக  விசா  ரத்து ,  சுகாதார வசதிகள் அதிகரிப்பு என எடுக்கப்பட்டு வருகிறது .  எனவே கொரோனா வைரஸ் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம் .

prime minister modi  advice to public regarding corona virus

அதேபோல் வரும் நாட்களில் எந்த மத்திய அமைச்சரும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள மாட்டார் .  அவசியமில்லாத பயணங்களை பொதுமக்களும் தவிர்க்க வேண்டும் அதற்காக பாதுகாப்பு கருதி ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார் .  அதேநேரத்தில் வெளிநாட்டினர் மூலமாக நோய் பரவியதால் சீனா தென்கொரியா அமெரிக்கா உள்ளிட்ட 15 நாட்டினருக்கு விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios