இந்திய தொலைத் தொடர்பு துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வை பிரதமர் மோடி நாளை காலை 10:45 மணிக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் துவங்கி வைத்து உரையாற்றுவார் என தொழில்துறை அமைப்பான COAI தெரிவித்துள்ளது.

4வது முறையாக நடக்கும் தொலைத்தொடர்புத் துறையின் இந்த மூன்று நாள் நிகழ்வு covid-19 காரணமாக முதல் முறையாக ஆன்லைனில் நடைபெற உள்ளது. செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேசன் ஆப் இந்தியா (Cellular Operators Association of India- COAI-யின் டிஜி லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.பி கோச்சார் இந்த நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரலை உறுதிப்படுத்தியுள்ளார். 

நாளை நடைபெற உள்ள துவக்க நிகழ்வில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, பாரதி குழும நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் பாரதி மிட்டல் மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமையும் என்றும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, தொலைத் தொடர்புகள் மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப துறைகளில் R&D-யை ஊக்குவிப்பது போன்றவை நோக்கமாக கொண்டு இது நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் IMC-2020இன் கருப்பொருள்  பாதுகாப்பான, நிலையான, புதுமையான என்ற கருத்தை மையாமாக கொண்டுள்ளது.  பன்முகத்தன்மையை விரிவுபடுத்துவது, தொலைத்தொடர்பு உலகில் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவது, இதன் முக்கிய நிகழ்வாக அமையும். 

ஐ.எம்.சி 2020-இன் கருப்பொருள் புதுமை - ஸ்மார்ட், பாதுகாப்பான, நிலையான". 'ஆத்மனிர்பர் பாரத்', 'டிஜிட்டல் உள்ளடக்கம்' மற்றும் 'நிலையான வளர்ச்சி என்பதே ஆகும். தொழில்முனைவோர் மற்றும் புதுமை' ஆகியவற்றை இலக்காக கொண்டு செயல்படும் பிரதமரின் நோக்கத்திற்கு வலுசேர்ப்பதாக இந்த நிகழ்வு அமையும், வெளிநாட்டு மற்றும் உள்ளூர் முதலீடுகளை ஊக்குவிப்பதும், தொலைத் தொடர்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் ஆர் அன்ட் டி யை ஊக்குவிப்பதுமே இந்த நிகழ்வின் நோக்கம் என செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (Cellular Operators Association of India- COAI) டிஜி லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.பி.கோச்சார் தெரிவித்துள்ளார். 

மேலும் இதில் பல்வேறு அமைச்சகங்கள், தொலைத் தொடர்பு தலைமை நிர்வாக அதிகாரிகள், உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள், 5 ஜி, செயற்கை நுண்ணறிவில் கள வல்லுநர்கள், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி), டேட்டா அனலிட்டிக்ஸ், கிளவுட் அண்ட் எட்ஜ் கம்ப்யூட்டிங், பிளாக்செயின், சைபர்-செக்யூரிட்டி, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் ஆட்டோமேஷன். போன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் நுட்பவியலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் சுமார் 28 தேசிய மற்றும் சர்வதேச பேச்சாளர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட  கண்காட்சி யாளர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.