கர்நடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரான ஸ்வாதி சதுர்வேதி என்பவர், தனது டுவிட்டர்  பக்கத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக முதலமைச்சர், தற்போதுள்ள மத்திய அமைச்சர் ஒருவருக்கு 150 கோடி ரூபாய் கொடுத்தற்கான ஆதாரம் வருமான வரித்துறையிடம் உள்ளதாகவும், அது தொடர்பான டைரி அவர்களிடம் இருப்பதாகவும் குற்றச்சாட்டை பதிவிட்டிருந்தார்.

தற்போது அந்த அமைச்சர் குற்றச்சாட்டுக்கு ஆதாரமான டைரியை அழிக்க முயற்சிப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பத்திரிக்கையாளரின் இந்த குற்றச்சாட்டுக்கு  பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்வாதி சதுர்வேதி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டைரி ஒன்று கர்நாடகாவில் வலம் வந்தது அனைவருக்கும் தெரியும் என ராஜீவ் சந்திரகேர் தெரிவித்துள்ளார்.
 
இந்த டைரியை உருவாக்கியது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் செல்லப்பிள்ளையான அமைச்சர் சிவகுமார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு  காங்கிரஸ் கட்சியின் எம்எல்சி ஒருவரிடம் இருந்து வருமான வரித்துறையினரால் கைப்பற்ற டைரியில்,  காங்கிரஸ் 
தலைவர்களிடம் கொடுத்த லஞ்சம் தொடர்பான அனைத்து விவரங்களும் உள்ளதாக  ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார்.