Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் இரங்கல்!!

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

president prime minister and chief minister mourn karunanidhis demise
Author
Chennai, First Published Aug 7, 2018, 7:25 PM IST

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்திய அளவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் திமுக தலைவர் கருணாநிதி. 94 வயதான கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று மாலை 6.10 மணிக்கு கருணாநிதி காலமானார். 

கருணாநிதியின் மறைவு, திமுக தொண்டர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கருணாநிதியின் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ள டுவீட்டில், இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. அவரது மறைவு செய்தியை கேட்டு துயரமடைந்ததாகவும், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

திரு. கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும்,  மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, முதல்வர் பழனிசாமி, கேரள ஆளுநர் சதாசிவம் ஆகியோரும் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios