விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைத்தே தீருவோம்...!! பச்சத் தண்ணிய குடிச்சுட்டு பல்லு குத்திய பிரேமலதா...!!
தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி தர்மத்தை தேமுதிக மட்டுமே கடைபிடிக்கிறது , குட்டக் குட்டக் குனியும் சாதி தேமுதிக இல்லை. நாங்களும் மீண்டு எழுவோம்
விஜயகாந்த் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்பதே எங்கள் நோக்கம் என்ன பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் . அவரது பேச்சு தேமுதிக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது . அதிமுக , திமுகவுக்கு மாற்று என கட்சி தொடங்கிய விஜயகாந்த் ஒருகட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து வரை உயர்ந்தார் . எந்த அதிமுகவால் எதிர்க்கட்சித் தலைவரானாரோ அதே அதிமுகவால் அவரது கட்சி சின்னாபின்னமாக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர். அதைத்தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு , கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என கொஞ்ச கொஞ்சமாக கட்சி கலகலத்துப் போனது .
தற்போது வரை தேமுதிக பத்தோடு பதினொன்று என்ற நிலையிலேயே இருந்து வருகிறது . ஆனாலும் மீண்டும் பழைய செல்வாக்கை அடையவேண்டும் , சரிவிலிருந்து மீண்டு வரவேண்டும் என தேமுதிக போராடி வருகிறது . இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிக ஓரளவுக்கு கௌரவமான வெற்றியை பெற்றுள்ளது . இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வென்ற தேமுதிக பிரமுகர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் . அதில் பேசிய விஜயகாந்த நான் மீண்டும் வருவேன் மக்களுக்கு நன்மை செய்ய விரைவில் வருவேன் என்று கூறினார் . அதைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் , எங்களது திருமண நாளை உங்களோடு கொண்டாடும் வகையில் தான் இந்த பாராட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி தர்மத்தை தேமுதிக மட்டுமே கடைபிடிக்கிறது , குட்டக் குட்டக் குனியும் சாதி தேமுதிக இல்லை. நாங்களும் மீண்டு எழுவோம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொள்வோம் . தேமுதிகவுக்கு இனிமேல் வளர்பிறை தான் வெற்றி முகம்தான் விஜயகாந்த் மீண்டும் தமிழகத்தில் வலம் வருவார் . விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமைப்பதே எங்கள் லட்சியம் என தெரிவித்த அவர் , 2011 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியாக நிற்கப் போகிறோமா.? தனியாக நிற்கப் போகிறோமா.? என்பதை விஜயகாந்த் உரிய நேரத்தில் தெரிவிப்பார் என ஆவேசமாக பேசினார்