கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. இதற்கு காரணம், கூட்டணி மற்றும் கேபினேட்டில் இல்லை. அது இந்த முறையும் தொடரும் என பிரேமலதா எச்சரித்தும், தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியாகவே அமைந்துள்ளது என ராமதாசும் எச்சரித்தார். சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்ததால், தமிழிசையோ தமிழகத்தை பிஜேபி அரசு என்றைக்கும் புறக்கணிக்காது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. இதற்கு நேர்மாறாக தமிழகத்தில் அதிமுக-பிஜேபி கூட்டணி போட்டியிட்ட தேனியைத் தவிர அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது.

இதுதொடர்பாக தேர்தல் முடிவுகள் வெளியான அன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “மக்கள் நம்பிக்கையைப் பெறுவதற்கு பிஜேபி கடுமையான உழைப்பை நல்கியது. ஆனாலும் நம்பிக்கை ஏற்படவில்லை. பிரதமர் மோடிக்கு வாக்கு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என எதிர்காலத்தில் வருந்துவார்கள் என்று தெரிவித்திருந்தார் தமிழிசை. அதேபோல, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. இதற்கு காரணம், கூட்டணி மற்றும் கேபினேட்டில் இல்லை. அது இந்த முறையும் தொடரும் என பிரேமலதா எச்சரித்தும், இப்போது எந்த அதிகாரமும் இல்லாத சூழலில் திமுகவால் எதை சாதிக்க முடியும்?  அந்த வகையில் பார்த்தால், தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியாகவே அமைந்துள்ளது போன்ற கருத்துக்களும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய தமிழிசை, தமிழகம் என்றைக்குமே புறக்கணிக்கப்படாது. இனிமேல் இருந்து தமிழக பாஜக தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சொல்வதை திரித்து வெளியிட்டு லாபமடைவதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டோம். தமிழகத்தில் பிஜேபி கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்திருந்தால் தமிழகம் பலன் பெறுமே என்றுதான் சொன்னோம். உடனே தமிழகத்திற்கு எதுவும் கிடைக்கக் கூடாது என்றும், பிஜேபிக்கு ஓட்டுப்போடவில்லை என்பதால் எதையும் கொடுக்கமாட்டோம் என்று கூறியதாகவும் பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வருகின்றன.

தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்று செய்திகள் வெளியிடுபவர்களை விட தமிழகத்தின் மீது எங்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. அதனால் தான் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 60 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்படவுள்ள கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் தமிழகத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.