நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மெகா கூட்டணியை அறிவித்துள்ளன. அதிமுக  கூட்டணியில் தேமுதிகவை இணைத்துவிட வேண்டும் என பாஜக பெரு முயற்சி செய்து வருகிறது. ஆனால் பாமகவுக்கு இணையான தொகுதிகள் வேண்டும் என பிரேமலதா அடம்அபிடித்து வந்தார்.

அதே நேரத்தில் தேமுதிக திமுகவுடனும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இத்னால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிமுக தேமுதிகவை எப்படியாவது கழற்றிவிட்டு விடலாம் என கருதுகிறது.

ஆனால்  ஏழு சீட்டுகளுக்கும் மேல் என்பதில் தொடங்கிய தேமுதிக இப்போது எப்படியாவது 4 சீட் கொடுத்தால் போதும் என்ற நிலைமைக்கு இறங்கிவிட்டது.  இது தொடர்பாக டெல்லிக்கு சுதீஷ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். பாஜகவும், எடப்பாடியை தொடர்பு கொண்டு  4 சீட்டுக்கு இறங்கி வந்திருக்காங்க. அதைக் கொடுத்துடலாம். கூட்டணியில் அவங்களும் இருந்தால் பலம்தானே என சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கு பதில் அணித்துள்ள  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, என் அரசியல் வாழ்க்கையில் இப்படி மாத்தி மாத்தி பேசி நான் பாத்ததே இல்ல. அரசியலையே வியாபாரமா மாத்திட்டாங்க பிரேமலதா. அவங்களை சேர்த்துக்கிட்டா மோடியின் இமேஜுக்குதான் பாதிப்பு ஏற்படும். மேலும் தேமுதிக கூட்டணிக்குள் வருவதை பாமகவும் விரும்பவில்லை. 

தேமுதிக நம்ம அணிக்கு வந்தால் நமக்கு இழப்புதானே தவிர எந்த நல்லதும் இல்ல. தேமுதிக, பாமகவுக்குள் நல்ல உறவு இல்லை. அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து நம்ம கூட்டணிக்குள் கொண்டு வருவதால் நமக்கு இழப்புதான் அதிகமாக இருக்கும். தேமுதிக இனி எங்கேயும் போக முடியாது. திமுகவும் அவங்களை சேர்த்துக்கப் போறது இல்லை. அதனால் இதை அப்படியே விட்டுடுங்க உன கூறியிருக்கிறார்.

இந்நிலையில்  நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, அதிமுகவை வறுத்து எடுத்து விட்டார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கூட்டணி பேச்சின்போதே அதிமுகவை அவர் கடுமையாக தாக்கி பேசியதன் பின்னணி தற்போது தெரிவந்துள்ளது.

இந்த இக்கட்டான நிலையில் சுதீஷ், தங்க தமிழ் செல்வனுடன்  பேசியுள்ளார். இந்தத் தகவல் தினகரனுக்கு சொல்லப்பட, ‘சரி பேசுவோம்’ என்று தகவல் தந்திருக்கிறார். தினகரன் தந்த இந்த நம்பிக்கையில்தான் பிரேமலதா திமுக, அதிமுகவுக்கு எதிராக கோபமான வார்த்தைகளால் விளையாடியுள்ளார் என்று கூறப்படுகிறது