மத்திய அரசுப் பணியாளர்களில் கர்பிணிப் பெண்களையும், மாற்றுத்திறனாளிகளையும், ஆபத்தான உடல்நிலை கொண்டவர்களைப் பணியில் சேருமாறு அழைக்க வேண்டாம் என மத்திய அரசு அனைத்துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

4ம் கட்டமாக கொரோனா ஊரடங்கு மே31ம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் மத்திய அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்து,50 சதவீதம் கீழ்நிலைப் பணியாளர்களை மட்டும் பணிக்கு வருமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இதில், கர்பிணிப் பெண்களையும், மாற்றுத்திறனாளிகளையும்,
ஆபத்தான உடல்நிலை கொண்டவர்களைப் பணியில் சேருமாறு அழைக்க வேண்டாம் எனவும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.மேலும் இவர்களை விடுத்து 50% பணியாளர்கள் அலுவலகத்தில் பணிபுரிவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.