இந்தி பேசம் மக்களுக்கு எதிரான கருத்து! சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.?களத்தில் இறங்கிய பிரசாந்த் கிஷோர்
வட மாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தமிழகத்தில் நடைபெறுவதாக பொய்யான தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கருத்துகளை பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்காத்து ஏன் என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட மாநில இளைஞர்கள் மீது தாக்குதல்
தமிழகத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது. இதனயைடுத்து ஏற்பட்ட அச்சத்தால் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் ஹோலி பண்டிகை கொண்டாடவும் ஒரே நேரத்தில் அதிகமானோர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்தநிலையிலை இது தொடர்பாக பொய்யான செய்திகளை பரபரப்பியது தெரியவந்தது. இதனையடுத்த வதந்தியை பரப்பிய 5 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் உத்தரபிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் இந்த பொய்யான தகவலை தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்ய முயன்ற நிலையில் நீதிமன்றத்தை நாடி தற்காலிய முன்ஜாமின் வாங்கினார்.
எச்சரிக்கை விடுத்த சீமான்
இந்தநிலையில் வட மாநில தொழிலாளர்கள் மீதான பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வட மாநில தொழிலாளர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்தநிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
சீமான் மீது நடவடிக்கை.?
வட மாநில தொழிலாளர்களுக்கு மிரட்டல் விகையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோவை பதிவிட்டு, வட மாநிலத்தவர்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களைப் பயன்படுத்திய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்