Pramalatha Vijayakanth arrested

கடலூரில் உள்ள சர்க்கரை ஆலையை முற்றுகையிட முயன்ற தேமுதிகவைச் சேர்ந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிகவினர் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள் முன்பாக தேமுதிக சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர் தமிழகத்தில் உள்ள 13 சர்க்கரை ஆலைகள் முன்பு தேமுதிகவினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கரும்பு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நிலுவைத் தொகையை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள 13 சர்க்கரை ஆலைகளை முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம், இஐடி பாரி ஆலையை பிரேமலதா விஜயகாந்த், தலைமையில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலையை கழக அவைத் தலைவர் மோகன்ராஜ் தலைமையிலும், வேலூர் மாவட்டம் ஆம்பூர், வடபுதுப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையை, கழகத் துணை செயலாளர் சுதீஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள இஐடி சர்க்கரை ஆலை முன்பு தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்கக்கோரி தேமுதிகவினர் முழக்கமிட்டனர். அப்போது திடீரென பிரேமலதா விஜயகாந் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து மிறியலில் ஈடபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள், பிரேமலதாவிடமும், தேமுதிக தொண்டர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை அடுத்து பிரேமலதா விஜயகாந்த், மற்றும் தேமுதிகவினர் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.