Asianet News TamilAsianet News Tamil

மின் வெட்டு என்பது மாயத் தோற்றம் : கேள்வி கேட்ட தங்கமணி.. ஒற்றை வார்த்தையில் ஆடவிட்ட செந்தில் பாலாஜி.

மின்வெட்டு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிகள் நடக்கிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின்வெட்டு என்பது அறவே இல்லை என்றும், அது இரண்டு நாட்களில் சரி செய்யப்பட்டுவிட்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். 

Power Minister Senthilpalaji has said that efforts are being made to create the illusion of a power cut.
Author
Chennai, First Published Apr 26, 2022, 6:00 PM IST

மின்வெட்டு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிகள் நடக்கிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின்வெட்டு என்பது அறவே இல்லை என்றும், அது இரண்டு நாட்களில் சரி செய்யப்பட்டுவிட்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுக-பாஜக என மாறி மாறி அரசை விமர்சித்து வருகின்றன. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை இரு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தேர்தல் நேர்த்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்ற குற்றச்சாட்டை அதிமுக தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

Power Minister Senthilpalaji has said that efforts are being made to create the illusion of a power cut.

பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் அது எதற்கும் இதுவரை ஆதாரங்கள் இல்லை. இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் அதை எதிர்க்கட்சிகள் விவாதப் பொருளாக்கி வருகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது மின்சாரத் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி, நிர்வாகத்தில் கோளாறு உள்ளதால்தான் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. முன்பு அணில் காரணமாக சொல்லப்பட்டது, இப்போது அமைச்சர் நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறுகிறார். இதை எப்படி எடுத்துக் கொள்வது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக ஆட்சி அமைந்தவுடன் மின்வெட்டு ஏற்படுகிறது என்ற மாயையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. மின்வெட்டுப் பிரச்சினை இரண்டு நாட்களில் சரி செய்யப்பட்டுவிட்டது. இதே கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ல்  59 மணி நேரம் 58 நிமிடங்களும், 2019 -ல் 39 மணி நேரம் 20 நிமிடங்களும், 2020-ல் 32 மணிநேரமும், 2021 தொடர் முன்னிட்டும் ஏற்பட்டது என சுட்டிக்காட்டினார். 2018-ல் நுகர்வோர் பற்றாக்குறை 76.90 ஒரு மில்லியன் யூனிட் கொண்டிருந்ததாக கூறிய செந்தில் பாலாஜி முதலமைச்சர் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

Power Minister Senthilpalaji has said that efforts are being made to create the illusion of a power cut.

இப்போது ஏற்பட்டது போல கடந்த காலங்களிலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்றும், சீரமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றார். இரவு கனவு கண்டாலும் பகல் கனவு கண்டாலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் மின்வெட்டு என்பது இருக்காது என்றும, அடுத்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தி இரட்டிப்பாகும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் பதிலடி கொடுத்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios