Asianet News TamilAsianet News Tamil

பாஜக போஸ்டர்கள் கிழிப்பு... திமுகதான் காரணம்... பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

வேலூரில் பாஜக சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கிழிக்கப்பட்டதை அடுத்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

poster of the bjp was torn down and the bjp protested at vellore
Author
Vellore, First Published Jul 10, 2022, 10:13 PM IST

வேலூரில் பாஜக சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கிழிக்கப்பட்டதை அடுத்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த போராட்டத்தால் போக்குவரத்தும் பாதுக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் அரப்பாக்கத்தில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கி இன்றும் நடைபெற்றது. இதனை அடுத்து வேலூர் கிரீன் சார்கில் பகுதியில் பாஜக சார்பாக வால் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிவதற்கு முன்னர் வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள மேம்பாலம் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த பாஜக போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ராஜபக்சே குடும்ப கதி.. திமுகவுக்கும் துணைபோகும் விசிகவுக்கும் எச்சரிக்கை.. திருமாவளவனுக்கு பாஜக பதிலடி!

poster of the bjp was torn down and the bjp protested at vellore

இதனை அறிந்த பாஜகவினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கிரீன் சார்க்கில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மிகுந்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிங்க: ஃபாசிஸ்டுகளை விரட்டியடிக்கும் இலங்கை மக்கள்.. சங்பரிவார்களுக்கு ஒரு எச்சரிக்கை.. திருமாவளவன் திகுதிகு.!

poster of the bjp was torn down and the bjp protested at vellore

ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேனர்களை கிழித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும், மீண்டும் பேனர்களை ஒட்ட வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என கூறி பாஜகவினர் போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் இது அனுமதி பெற்று வைக்கப்பட்ட பேனர் என்றும் இதனை கட்சி வளர்வதை பார்த்து பயந்த திமுகவினர் ஏவிவிட்டு தான் இது நடந்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்களை கொண்டு கிழிக்கப்பட்ட பேனர் மீண்டும் ஒட்டப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios