Asianet News TamilAsianet News Tamil

மே 2ம் தேதிக்கு முன்னரே வாக்கு எண்ணிக்கையா? அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு விளக்கம்..!

வாக்கு எண்ணும் நாளில்தான் தபால் வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என்று அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

Postal ballot boxes should not be opened on May 1st...minister jayakumar
Author
Tamil Nadu, First Published Apr 22, 2021, 6:35 PM IST

வாக்கு எண்ணும் நாளில்தான் தபால் வாக்குகளும் எண்ணப்பட வேண்டும் என்று அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனிடையே தபால் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சார்பில் மனு அளித்தார்.

Postal ballot boxes should not be opened on May 1st...minister jayakumar

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்படவேண்டும் என்றும் அதற்கு முன்பாக மே 1ம் தேதி எந்த சூழலிலும் ஸ்டார்ங் ரூம் திறக்க கூடாது என வலியுறுத்தி உள்ளோம் என்றார். 

Postal ballot boxes should not be opened on May 1st...minister jayakumar

சில மாவட்டங்களில் மே 1ம் தேதி தபால் வாக்குகள் எண்ணும் பணி நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தபால் வாக்கு தொடர்பாக அதிமுக தலைமைக்கு கிடைத்த தகவலை தெரிவித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கையில் மேஜைகளை குறைக்கக்கூடாது என்றும் கடந்த கால விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios