கர்நாடக வெற்றிக்கு பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிய மம்தா.. காங்கிரஸின் ரியாக்ஷன் இதுதான்..

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு, 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க மம்தா முடிவு செய்துள்ளார்.

post congress victory mamtha change her decision congress reaction is different

வரும் 2024 மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாநில கட்சிகளை அணுகி வருகிறார். எனினும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். அரசியல் பிரசாரங்களின் போது இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவரையொருவர் வெளிப்படையாக விமர்சித்து கொண்டனர். கடந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர்கள் பலர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தபோது இரு கட்சிகளின் உறவு மேலும் மோசமடைந்தன.

நிலைப்பாட்டை மாற்றிய மம்தா

இந்த சூழலில் சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், மம்தா தனது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ எங்கெல்லாம் காங்கிரஸ் வலுவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் போராடட்டும். நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம், (அதில்) தவறில்லை. ஆனால், அவர்கள் மற்ற அரசியல் கட்சிகளையும் ஆதரிக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : கர்நாடகாவில் அபாரமாக வெற்றி பெற்றும் நெருக்கடியில் தலைமை; திகைக்க வைக்கும் காரணங்கள்!!

தொடர்ந்து பேசிய அவர் “ வலுவான பிராந்திய கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஒரு பிராந்தியக் கட்சி எங்கெல்லாம் வலுவாக இருக்கிறதோ அங்கெல்லாம் பாஜகவால் சண்டை போட முடியாது... மக்கள் மிகவும் மனச்சோர்வடைந்துள்ளனர், விரக்தியடைந்துள்ளனர்... பொருளாதாரம் ஏற்கனவே பாழாகிவிட்டது, ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டுவிட்டது; மல்யுத்த வீரர்கள் கூட காப்பாற்றப்படவில்லை. எனவே, தங்கள் பிராந்தியத்தில் யார் வலுவாக இருந்தாலும், அவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் (மற்றும் அவரது சமாஜ்வாதி கட்சி)க்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால், உ.பி.யில் காங்கிரஸ் போட்டியிடக் கூடாது என்று நான் கூறவில்லை. இன்னும் எதுவும் இறுதிக்கட்டத்தில் இல்லை என்பதை முடிவு செய்வோம்”என்றும் கூறினார்

முன்னதாக கர்நாடகாவில் மக்களின் தீர்ப்புக்கு வாழ்த்து தெரிவித்த டிஎம்சி தலைவர், "முரட்டுத்தனமான சர்வாதிகார மற்றும் பெரும்பான்மை" அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பாஜக தோற்கும் என்றும் அவர் கணித்திருந்தார்.

காங்கிரஸின் ரியாக்‌ஷன்

மம்தாவின் இந்த கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த போது, எந்த காங்கிரஸ் தலைவரின் வெற்றிக்கும் பானர்ஜி வேண்டுகோள் விடுக்கவில்லை என்றார். மேலும்“அவர் உ.பி., பீகாருக்குச் செல்கிறார், ஆனால் காங்கிரஸ் போராடும் கர்நாடகாவுக்கு வரவில்லை. மேலும் கர்நாடகாவில் கட்சியின் பெரிய வெற்றிக்குப் பிறகு, காங்கிரஸ் இல்லாமல் முன்னேறுவது கடினம் என்பதை அவர் உணர்ந்தார். சோனியா ஜி இல்லை என்றால், 2011 இல் மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது.” என்று தெரிவித்தார்.

மறுபுறம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் பானர்ஜியின் அறிக்கையை வரவேற்றார். மேலும் “இன்று மம்தா பானர்ஜி சில அறிக்கைகளை வெளியிட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எதிர்க்கட்சிகளுக்கு நல்ல விஷயம்” என்றும் கூறினார்.

இதையும் படிங்க : கர்நாடக முதல்வர் யார்? காங்கிரஸின் திட்டம் இதுதான்.. இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios