பாப்புலர்‌ பிரண்ட்‌ ஆப்‌ இந்தியா மிகவும்‌ ஆபத்தான இயக்கம்‌ என்று ஆளுநர்‌ ஆர்‌.என்‌. ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்‌. அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என்றும் அவர் தெரிவித்துள்லார்.  

சென்னை கல்லூரியில் மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சீர்குலைப்பதாக குற்றம்சாட்டினார். பாப்புலர்‌ பிரண்ட்‌ ஆப்‌ இந்தியா ஆபத்தான இயக்கம்‌ என்று தெரிவித்தார். மனித உரிமை, அரசியல்‌- மாணவர்‌ இயக்கம்‌ என பல முகமூடிகளை அணிந்து நாட்டில்‌ செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

பாப்புலர்‌ பிரண்ட்‌ ஆப்‌ இந்தியா :

அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே என்றும் பாப்புலர்‌ பிரண்ட்‌ ஆப்‌ இந்தியா பயங்கரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பேசினார். மேலும் இந்த இயக்கம், ஆப்கானிஸ்தான்‌, ஈராக்‌, சிரியாவில்‌ தாக்குதலில்‌ ஈடுபட ஆள்‌ அனுப்புகிறது என்று பகிரங்கமாக குற்றச்சாட்டினார். இதனை சில கட்சிகள்‌ ஆதரிப்பது பெரும்‌ அச்சுறுத்தலாக உள்ளது.அரசியல்‌ லாபத்துக்காக வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது எனவும் பயங்கரவாதத்தில்‌ ஈடுபட்டால்‌ அதற்கான பதிலடியை அவர்கள்‌ பெறுவார்கள்‌ எனவும் ஆளுநர்‌ ஆர்‌.என்‌. ரவி கூறினார்‌.

மேலும் படிக்க: எந்தவோரு அமைச்சர்களும் ரோட்டுல நடக்க முடியாது என மிரட்டல்.. மன்னார்குடி ஜீயருக்கு எதிராக பறந்த புகார்..!

2006 -இல்‌ நேசனல்‌ டெவலப்மெண்ட்‌ பிரண்ட்‌ என்ற அமைப்பு பாப்புலர்‌ பிரண்ட்‌ ஆப்‌ இந்தியா என்ற பெயரில்‌ புதிய அமைப்பாக மாறியது. பின்னர்‌ தமிழகத்தில்‌ மனித நீதிப்‌ பாசறை, கர்நாடகத்தில்‌ கர்நாடக கண்ணிய மன்றம்‌, கோவாவில்‌ குடிமக்கள்‌ மன்றம்‌, ராஜாஸ்தானில்‌ கல்வி மற்றும்‌ சமுதாயச்‌ சமூகம்‌, மேற்கு வங்கத்தில்‌ நகரிக்‌ அதிகர்‌ சுரக்ஷா சமீதி, மணிப்பூரில்‌ லிலிங்‌ சமூகக்‌ மன்றம்‌, ஆந்திரத்தில்‌ சமூக நீதிக்‌ கழகம்‌ போன்ற அமைப்புகள்‌ இதனுடன்‌ இணைந்தன.

இந்த அமைப்பு இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு, இஸ்லாமியத் தனிநபர் சட்ட நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் முஸ்லீம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 2009 ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ”வங்க கடலில் உருவாகிறது புயல்”.. சூறாவளி காற்றும் வீசும்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை..! வானிலை மையம் அலர்ட்..