போராட்டம் என்ற பெயரில் “சமூக விரோதிகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்” என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடந்து வருகிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதில், போராட்டம் என்ற பெயரில் சில சமூக விரோதிகள் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

பாஜகவை பொறுத்தவரை, எந்த கட்சியையும் உடைத்து அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. அப்படி செய்யவும் மாட்டோம்.

பாஜகவில் இணையும் எண்ணத்துடன், யார் வேண்டுமானாலும், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தால் அவர்களை இணைத்து கொள்வோம்..

இவ்வாறு அவர் கூறினார்.