Asianet News TamilAsianet News Tamil

அப்துல் கலாமை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது… மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதங்கம்…

pon.radha krishnan press meet about abdul kalam
pon.radha krishnan press meet about abdul kalam
Author
First Published Jul 31, 2017, 8:02 AM IST


தை வைத்து அரசியல் செய்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்னார் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் மணி மண்டபத்தில் அவரது வீட்டில் இருந்த போட்டோ படியே சிலை அமைக்கப்பட்டு உள்ளது என்றும், அவர் கர்நாடக இசை பிரியர். வீணையை மீட்ட கூடியவர். அவர் மீட்டிய வீணையும் அங்கு வைக்கப்பட்டுளளது. இதில் எந்த வித மாற்று சிந்தனையும் இல்லை என தெரிவித்தார்..

இந்தியாவில் எவருக்கும் இல்லாத சிறப்பாக நினைவு மண்டபம் அமைக்கவேண்டும் என மோடி விரும்பி மண்டபம் அமைத்துள்ளதாக பொன்னார் தெரிவித்தார்.

அப்துல் கலாம் அனைத்தும் மதங்களையும் உயர்வாக கருதினார். பகவத்கீதை, குரான், பைபிள் ஆகிய மூன்று நுால்களையும் மதித்தார் ஆனால் . திருக்குறளுக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் போல் சிலர் முழங்குகிறார்கள் என ஆவேசமானார்.

அப்துல்கலாமின் மீது உண்மையான பாசம் இருந்தால் இப்பிரச்சனையை விவாத பொருளாக மாற்றியிருக்க மாட்டார்கள் என தெரிவித்த பொன்னார்,  தயவு செய்து கொச்சையான அரசியலுக்கு மாபெரும் மனிதர் அப்துல்கலாமை கொண்டு வராதீர்கள் என கூறினார்.

அப்துல்கலாமை வைத்து அரசியல் செய்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios