அசுரன் படத்தைப் பார்த்துவீட்டு பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த பாமக ராமதாஸ் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் இருப்பதாகவும் இதை ஸ்டாலின் திருப்பிக் கொடுப்பாரா என கேள்வி எழுப்பி இருந்தார்.

இது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளதாக தெரரிவித்தார்.

முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்றால் அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என பொன் ராதாகிருஷ்ணன் எச்சரித்தார்.