கள்ளக்குறிச்சியில், 4 லட்சத்து 1,848 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கவுதம சிகாமணி. 3 லட்சத்து 21 ஆயிரத்து 210 ஓட்டுகள் வாங்கி சுதீஷ் தோல்வியடைந்தார். இதுல கொடும என்னன்னா? ஒரு சுற்றில் கூட முன்னணியில் வரவில்லை, அட அதுக்கு கூட பரவாயில்ல, ஒரு பூத்துல கூட முன்னிலை இல்லன்னா எப்படி? அதிலும் சுதீஷுக்கென்று தனி சிறப்பு உள்ளது, தமிழகத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர் செம்ம அடி வாங்கியது சுதீஷ் தான்,  அதேபோல இதுவரை போட்டியிட்டதில் ஒரு முறை கூட ஜெயித்ததே இல்ல. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பிஜேபி கூட்டணி 353 தொகுதிகளை அசால்ட்டாக கைப்பற்றியது,  இதில் பிஜேபி மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்த பட்சம் 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பிஜேபிக்கு அதைவிட கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன.

ஆனால், தமிழகத்தை பொறுத்த வரை பிஜேபி பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த கூட்டணியில் பாமக 7 தொகுதிகளும், பாஜக 5 தொகுதிகளும், தேமுதிக 4 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டது எக்ஸிட் போல் முடிவுகளின்படி தேமுதிக ஒரு தொகுதியில் ஜெயிக்கும் என சொன்னார்கள். அதுவும்,  சுதீஷ் போட்டியிட்ட கள்ளக்குறிச்சியாக இருக்கவே வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டது. 

இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு, கூட்டணி வேட்பாளர்கள் அன்புமணியைத் தவிர ஒருவர் கூட  முன்னிலையில் இல்லை. காலையிலிருந்தே டிவி  முன்னாடி தன் தம்பி சுதீஷுடன் நியூஸ் பார்த்துக்கிட்டிருந்த பிரேமலதா, நாம நின்ன 4 தொகுதியிலும் ஒரு ரவுண்டில் கூட நாம முன்னிலைன்னு செய்தி வரலையேன்னு அதிர்ச்சியில் தம்பியிடம் அழுதுள்ளார்.  அதிலும், சிவோட்டர் எக்ஸிட் போல் ரிசல்டில் தேமுதிகவில் யார் அதுக ஒட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பார் எனா சொல்லபப்ட்டதோ? அதே சுதீஷ் தான் அதிக ஒட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். அதாவது, கவுதம சிகாமணி 4 லட்சத்து 1,848 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 3 லட்சத்து 21 ஆயிரத்து 210 ஓட்டுகள் வாங்கி சுதீஷ் தோல்வியடைந்தார். இதுல கொடும என்னன்னா? ஒரு சுற்றில் கூட முன்னணியில் வரவில்லை, அட அதுக்கு கூட பரவாயில்ல, ஒரு பூத்துல கூட முன்னிலை இல்லன்னா எப்படி? 

அதிலும் சுதீஷுக்கென்று தனி சிறப்பு உள்ளது, தமிழகத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர் செம்ம அடி வாங்கியது சுதீஷ் தான்,  அதேபோல இதுவரை போட்டியிட்டதில் ஒரு முறை கூட ஜெயித்ததே இல்ல. 

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்து மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைய இருக்கிறது. இதில் கொடுமை என்னன்னா? ரிசல்ட் வருவதற்கு முன்பு  டெல்லி விருந்தில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய சுதீஷிடம் செய்தியாளர்கள், ஒருவேளை பிஜேபி ஆட்சியை தக்கவைத்தால் மத்திய அமைச்சரவையில் தேமுதிக இடம் பெறுமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய சுதீஷ் இது குறித்து தேர்தல் முடிவுகள் வெளி வந்த பின் தான் தீர்மானிக்க முடியும் என்றார். மேலும் மத்திய அமைச்சரவையில் தங்கள் கட்சி இடம் பெறுவது குறித்து விஜயகாந்த் மற்றும் எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் சேர்ந்து தான் முடிவு செய்வர் என எல்.கே.சுதீஷ் கூறினார். மத்திய அமைச்சராகலாம் என எவ்வளவு கனவு கண்டிருப்பார்?  பொன்முடி மகன் இப்படியா மரண அடிகொடுப்பது அதுவும் நாலு லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் தோற்கடிப்பது? சோ ஸேட்...