Pon Radhakrishnan Trolled By DMK Carders
பொன்னார் தம்பி ஒரு ஓரமா போயி விளையாடுங்க பாப்பம்: இணைய தளத்தில் கழுவிக் கழுவி ஊற்றும் தி.மு.க.
பேட்டி கொடுக்குறப்பவெல்லாம் தி.மு.க.வுக்கு எதிராக ஏதாவது பேசவேண்டுமே என்ற உந்துததால் எந்த லாஜிக்கும் இல்லாமல் எதையாவது பேசிவைத்து, பின் சோஷியல் மீடியாவில் வறுபட்டு புண்ணார் ஆவதுதான் பொன்னாரின் வழக்கம்.
கருணாநிதிக்கு நடத்தப்பட்ட சட்டமன்ற வைரவிழா கூட்டத்தை ‘வயதானவர்கள் நடத்திய விழா’ என்று சொல்லி பின் செயல்தலைவர் ஸ்டாலினில் துவங்கி நம்ம பக்கத்து வீட்டு முத்துவீரன் வரை அத்தனை பேரிடமும் மரண கலாய் கமெண்டுகளை வாங்கிக் கட்டினார் பொன்ராதாகிருஷ்ணன்.
இந்நிலையில் வேலூரில் பொன்னார் உதிர்த்திருக்கும் பொன்னான வார்த்தைகள் அவருக்கு மீண்டும் கலாய்ப்புகளை கொண்டு வந்திருக்கின்றன.
பா.ஜ.க. அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க கூட்டம் வேலூர் அருகே ரங்காபுரத்தில் நடந்தது. இந்த நிகழ்வு முடிந்ததும் நிருபர்களை சந்தித்த பொன்னார் “தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்கிறார் ஸ்டாலின் . ஆனால் அது நடக்காது. அ.தி.மு.க.வில் இடைவெளி வந்தபோதும் (பிரிவை, பிளவை, உடைந்ததை, அணியணியாய் பிரிந்ததை...த்தான் இவ்வளவு நாகரீகமா சொல்றாராமா!) யாரும் தி.மு.க. பக்கம் போகவில்லை.
அ.தி.மு.க. ஆட்சி இன்னும் மூன்று ஆண்டுகள் (என்ன கணக்கு இது?) நிலைத்திருக்குமானால் தி.மு.க. தமிழகத்தில் காணாமல் போக வாய்ப்புள்ளது என ஸ்டாலின் நினைக்கிறார். அதனால்தான் அ.தி.மு.க. அரசு இன்னமும் வேகமாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.

நாங்கள் எந்த ஆட்சியையும் டிஸ்மிஸ் செய்ய விரும்பவில்லை. ” என்று அ.தி.மு.க.வை தாங்கு தாங்கென்று தாங்கி பேசியிருக்கிறார்.
இதைத்தான் சமூக வலைதளங்களில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, மசாலாவை அள்ளிப்போட்டு வறுத்துத் தள்ளுகின்றனர் இணையதள தி.மு.க. அணியினர். பொன்னாரை...
‘சார் நீங்க மத்திய இணையமைச்சரா இல்ல, அ.தி.மு.க.வோட ஒருங்கிணைந்த கொ.ப.சே.வா?
இன்னும் 3 வருஷம் அ.தி.மு.க. ஆட்சி இருந்தா தி.மு.க. காணாமல் போயிடும்னு தளபதி பயப்படுறதா நீங்க சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு அரசியல் அறிவு எந்தளவுக்கு பொங்குதுன்னு இந்த ஒரு ஸ்டேட்மெணே போதும் சார்.
பொன்னார் தம்பி, அரசியல்ல பெரியவங்க பேசிட்டிருக்குறப்ப நீங்க ஏன் உள்ளார வர்றீங்க, ஒரு ஓரமா தள்ளிப்போய் விளையாடுங்க பாப்பம்.
விவாதத்துக்கு நீங்க சரிப்பட்டு வரமாட்டிங்க. எப்ப பாரு காமெடியாவே பேசி சின்னப்புள்ளத்தனத்த நிரூபிச்சுட்டே இருக்குறீங்க. வீட்டுக்கு போயி பெரியவங்க யாராச்சும் இருந்தா கூட்டிட்டு வாங்க பொன்னார்.” என்று கழுவிக்கழுவி ஊற்றி வருகிறார்கள்.
அய்யோ பாவம் தமிழக பி.ஜே.பி. எதைச்சொன்னாலும் அதை காமெடியாவே பாக்குது உலகம்!
