Asianet News TamilAsianet News Tamil

நமக்கு ஆறு அறிவு இருக்கு... அதனால் ஆறு மொழிகள் படிக்கவேண்டும்... பொன்.ராதாவின் அடடே விளக்கம்..!

கழுகு எங்கு பறந்தாலும் பார்வை பிணத்தின் மீது என்பது போல் தமிழை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கட்டமாக தெரிவித்துள்ளார். 

pon radhakrishnan press meet
Author
Tamil Nadu, First Published Sep 15, 2019, 5:03 PM IST

கழுகு எங்கு பறந்தாலும் பார்வை பிணத்தின் மீது என்பது போல் தமிழை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கட்டமாக தெரிவித்துள்ளார். 

சென்னை கமலாலயத்தில் காந்தியடிகள் 150-ம் ஆண்டு பாதயாத்திரை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘இந்திய திருநாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், தேச பிதா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் விழிப்புணர்வு யாத்திரையை நடத்த திட்டமிட்டுளோம் என்றார். pon radhakrishnan press meet

மண்ணின் தன்மையைக் காக்கும் சுதேசி பொருளாதாரக் கொள்கை, தீண்டாமை ஒழிப்பு, பெண் உரிமை ஆகியவை இதன் நோக்கமாக அமையும். தீயசக்திக்கு எதிராக, நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்தும், இந்தியத் தன்மை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதற்காக, மேக் இன் இந்தியா திட்டத்தை பரப்பும் நோக்கில் இந்த யாத்திரை நடைபெறும். pon radhakrishnan press meet

மேலும், பேசுகையில் கழுகு எங்கு பறந்தாலும் பார்வை பிணத்தின் மீது என்பது போல் தமிழை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர். சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் நரேந்திர மோடி பலமுறை கூறியுள்ளார். மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது. ஆறு மொழிகள் படித்தாக வேண்டும். பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்திருப்பது உலக அரங்கில் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.  5 மற்றும் 8-ம் வகுப்பு தேர்வுகளை பொது தேர்வாக நடத்தினால் என்ன தவறு? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios