அத்தனை ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வந்துகொண்டிருக்கும் ‘நக்கீரன்’ கோபாலின் கைது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பா.ஜ.க.இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிக்கொண்டிருந்த பொன்னார், ‘தமிழகத்தில் பா.ஜ.க.வின் தாக்கம் இன்றி இனி எதுவுமே நடக்காது. பா.ஜ.க. இல்லாமல் இனி தமிழக அரசியல் இல்லை.  நல்லதோ கெட்டதோ இனி எங்களைப் பற்றிப் பேசாமல் இனி யாரும் தமிழக அரசியல் குறித்து பேச முடியாது.

அப்போது நிருபர் ஒருவர் குறுக்கிட்டு, ‘நக்கீரன்’ கோபால் கைது செய்யப்பட்டிருக்கிறாரே?’ என்று கேள்வி கேட்டபோது, வாய்கூசாமல் அது பற்றி எனக்குத்தெரியாது என்று பதில் அளித்தார்.

கேள்வியை இவரோட நிறுத்திக்குங்க மிஸ்டர் நிருபர், அடுத்து இதே கேள்வியை மேடம் தமிழிசை கிட்ட கேட்டீங்கன்னா அவங்க ‘நக்கீரன்’ கோபால்ன்னா யாருன்னே தெரியாதுன்னு சொன்னாலும் சொல்வாங்க.