தமிழகத்திற்கு பிரதமர் வருகை தரும் போது கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வைகோவின் சவாலிற்கு, பெரும் சவால் விடுத்து உள்ளார் பொன் ராதா.

தனக்கு எதிராக சதிசெயல் நடைப்பெறுகிறது என கூறி, திமுகவில் இருந்து  வெளியேறினார். மேலும், சதிசெயல் செய்தவர்களை அரசியலில் இருந்து ஓய்வு பெற வைப்பேன் என சபதம் செய்து மதிமுக உருவாக்கிய வைகோ, தற்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்குமே  தெரியும்..... 

தீய சக்திக்கு எதிராக போராடுவேன் என கூறி சபதம் விடுத்த வைகோ, தற்போது அதே தீய சக்திக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வருகிறார். இதிலிருந்தே தெரியும் அவருடைய நிலைப்பாடு என்ன என்பதை... எப்படியாவது திமுக வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என பெரும்முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரை பார்த்து திமுக வில் இருப்பவர்களே ஏளனமாய் சிரிக்கின்றனர்.

இவர் யாரையோ திருப்திபடுத்தவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் இப்படி செய்வது ஊருக்கே தெரிந்தது..... பிரதமர் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வார்த்தைகள்,  திமுகவிற்காக எவ்வளவு பாடுபடுகிறார் என்பதை  தெளிவுப்படுத்துகிறது...

பிரதமர் தமிழகம் வருவார், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் தருவார். எந்தவித போராட்டத்தையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என  மத்திய அமைச்சர் பொன். ராதாக்கிருஷ்ணன் அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

 

ஏற்கனவே தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்லிக்கொண்டேன் இருக்கிறார். இந்த தருணத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தை பொறுத்தவரை  எப்படி இருக்கும் என கொஞ்சம் யூகிக்க முடிந்தாலும், இளைஞர்கள் மத்தியில் பாஜக விற்கு வரவேற்பு உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள  முடிகிறது. ஆக நாங்களும் ஒரு கை பார்ப்போம் என பாஜாக களத்தில் இறங்கி இருப்பதை கண்டால், திமுகவிற்கு நெருக்கடி வர கூட வாய்ப்பு உள்ளது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.