pon radha talks about ISIS
தமிழகம் ISIS மையமாக மாறி வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது சொந்த தொகுதியான நாகர் கோவில் சென்றுள்ள பொன்ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களை திடீரென சந்தித்துள்ளார். அப்போது இலங்கை அரசுக்கு மோடி தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாக கூறினார்.
இலங்கை பிரச்சணையை வேறு விதமாக கையாண்டால் அது அரசியல் ஆதாயத்துக்காக தான் இருப்பதாகவும் இலங்கை அரசு கடுமையான தண்டனையாக அபராதம் வித்துள்ளதை ஏற்க முடியாது என்றார்.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டினால் அவர்கள் அபராதம் விதிப்பதாக அறிவித்துள்ளனர் அதேபோல் அந்நாட்டு மீனவர்கள் நம் எல்லைக்கு வந்தால் அவர்களுக்கு நம் நாட்டில் விதிக்கப்படும் அபராத தொகையை இலங்கை அரசு கட்ட தயாராக இருக்கிறதா என்றார்.
மேலும் இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள 50 படகுகளையும் 140 மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். கதிராமங்கலத்தில் மக்களிடை சில விஷக்கிருமிகள் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர் என்றதுடன் தமிழக அரசுதான் மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. ஐஎஸ் அமைப்புகள் தமிழகத்தை மைய இடமாக கொண்டு செயல்படுகின்றன. இவற்றை தமிழக உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் எந்த ஆட்சி வந்தாலும் கொலை கொள்ளை நடப்பது சகஜம் தான் என்று முதலமைச்சர் எடப்படி பழனிசாமி கூறியுள்ளார். இச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார். பொன் ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
