காவிரி பிரச்சினை பற்றி பேச தி.மு.க.வுக்கோ, காங்கிரசுக்கோ எந்தவித தகுதியும் இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, இந்திய எல்லையில் இருந்து நம்மை காக்கும் ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி துரோகங்களை செய்து உள்ளதாக தெரிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்திரா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் வழக்கை திரும்ப பெற்று கொண்டதாக தெரிவித்துள்ளார்.
யாரையும் கலந்து பேசாமல் காவிரி விவகாரத்தில் கருணாநிதி தன்னிச்சையாக வழக்கை திரும்ப பெற்றுள்ளது பெரிய துரோகம் என்றும், இந்த துரோகத்தை தமிழ் சமுதாயத்துக்கு வேறு யாரும் செய்து இருக்கமுடியாது என தெரிவித்தார்.

மேலும், காவிரி பிரச்சினை பற்றி பேச தி.மு.க.வுக்கோ, காங்கிரசுக்கோ எந்தவித தகுதியும் இல்லை என்றும், தமிழக மக்களுக்கு காங்கிரஸ்-தி.மு.க. செய்து உள்ள துரோகங்களுக்கு அளவே கிடையாது என பொன்.ராதா குற்றம்சாடியுள்ளார்.
