pon radha supports kamal

நடிகர் கமல் ஹாசன், அனைத்து துறைகளிலும் ஊழல் என கூறியது உண்மைதான் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து பேசிய கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சாரம் கெட்டுப்போகிறது என்றால் பல படங்களில் முத்தக்காடசியில் நெருக்கமாக நடித்தபோது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். 

தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும் சிஸ்டம் சரியில்லை என்று, தான் ஒரு வருடத்துக்கு முன்பே தெரிவித்ததாகவும், அதனை தற்போது ரஜினிகாந்த் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகர் கமல் ஹாசனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் வந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கமல் கூறியது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் அழகியநத்தத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து துறைகளிலும் ஊழல் என கமல் கூறியது உண்மைதான் என்றார்.

தமிழகத்தின் அனைத்துதுறைகளிலும் லஞ்சம் உள்ளது என வெளிப்படையாக கூறிய கமலை பாராட்டுகிறேன் என்றும் கூறினார்.

மீனவர்கள் பிரச்சனையில் காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறது என்றும் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வுகாண ஒரு கூட்டத்துக்குக்கூட காங்கிரஸ் ஏற்பாடு செய்யவில்லை என்றும் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.