சியாமளாபுரத்தில் பெண்கள் தாக்கப்பட்டது கண்டிக்கதக்கது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் திருப்பூர் சியாமளாபுரத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றார்.

எந்த சூழ்நிலையில் தாக்குதல் நடந்தது என்ற நிலையும் பார்க்க வேண்டும். ஆனால் பொதுவாக பெண்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது என்றும் விவசாயிகள் போராட்டம் கடந்த 30 நாட்களுக்கு மேல் நடைபெறுகிறது.

அவர்களை 5 முறை சந்தித்துப் பேசியுள்ளேன். மேலும் நிதியமைச்சர், விவசாயத்துறை அமைச்சர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்.தமிழகத்திற்கு விவசாய கடன், வறட்சி நிவாரணம் போன்ற நிதியை மத்திய அரசு அளித்துள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் அம்மாநில அரசு விவசாயக் கடன் தள்ளுபடி செய்துள்ளது. அதே போல் தமிழக அரசு தான் முயற்சி எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்தியது வருத்தமளிக்கிறது .அதே போல் பெண்களும் நிர்வாண போராட்டம் நடத்த  உள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் நம் தாயை போன்றவர்கள் இது செயவில் ஈடுபட வேண்டாம் என்று பொன்.இராதாகிருஷ்ணன் கூறினார்