தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிக வாய்ப்பு உள்ளதாகவும், ஓராண்டுக்குத்தான் விலக்கு தவிர 3 ஆண்டுகளுக்கு விலக்கு என்பதை ஏற்க முடியாது என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்களிக்கப்படும் என்றும், நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

இதையடுத்து, தமிழக அவசர சட்ட முன் வடிவை, தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இன்று காலை சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,  கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் ஓராண்டுக்குத்தான் நீட் தேர்வு விலக்கு தவிர 3 ஆண்டுகளுக்கு விலக்கு என்பதை ஏற்க முடியாது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.