Asianet News TamilAsianet News Tamil

"அதிமுகவின் அணிகள் சேர்ந்தால் அவர்களுக்கு நல்லது" - பொன்ராதா அறிவுரை!

pon radha adviced to admk teams
pon radha adviced to admk teams
Author
First Published Aug 11, 2017, 4:56 PM IST


அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவியும், பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் ஒபிஎஸ் அணியினர் இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி தர உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இதைதொடர்ந்து நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு  தேர்வு செய்யப்பட்டார்.  அவரது பதவி ஏற்பு விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. அவருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவி பிரமாணம் செய்து  வைத்தார். 

pon radha adviced to admk teams

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள், மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர்  கலந்து  கொண்டார்.  

இந்நிலையில் மத்திய அமைச்சர் பென் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுகவின் எடப்பாடி அணியும் பன்னீர் அணியும் ஒன்றாக இணைந்தால் அவர்களுக்கு நல்லது என்று கூறினார்.

pon radha adviced to admk teams

பிளவுபட்ட அணியினர் ஒன்றிணைந்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்து என்றார். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை குடியரசு தலைவர் பதவியேற்ப்பு விழாவிற்கு தான் வந்துள்ளார் என்றும் இரு அணிகள் இணைப்புக்கு பாஜக எந்த வித உதவியும் செய்ய வில்லை என்றும் தெரிவித்தார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios