முதலமைச்சர் உடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இரு அணிகள் இணைப்பு விரைவில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

60 நாட்கள் கெடு விதித்திருந்த தினகரன் மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன் என தெரிவித்துள்ளதால் எடப்பாடி தரப்பு ஆடிபோய் உள்ளது.

இதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை டிடிவி ஆதரவாளர்களான தங்க தமிழ்செல்வனும், தளவாய் சுந்தரமும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் இரு அணிகள் இணைப்பு விரைவில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.