Asianet News TamilAsianet News Tamil

ரஜினி – கமல் கன்பார்ம் ஆகிவிட்டது..! அடுத்தது விஜயகாந்த்..! தீவிரமாகும் அரசியல் கணக்கு..!

சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினி தலைமையில் கமல், விஜயகாந்த், ராமதாஸ் என புதிய அணி அமைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக கடந்த மாதமே ஆசியாநெட் தமிழ் கூறியிருந்தது.

Political plan...Rajini - Kamal has Confirm...next vijayakanth
Author
Tamil Nadu, First Published Nov 20, 2019, 10:32 AM IST

சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினி தலைமையில் கமல், விஜயகாந்த், ராமதாஸ் என புதிய அணி அமைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக கடந்த மாதமே ஆசியாநெட் தமிழ் கூறியிருந்தது.

ஆசியாநெட் தமிழ் கூறியது போலவே கமல் 60 திரைப்பயண விழா அரசியல் கணக்குகளுக்கான துவக்கமாக அமைந்துவிட்டது. கமல் விழா மேடையில் ரஜினி பேசிய அரசியல் அதிமுகவை சீண்டும் வகையில் இருந்தது. ரஜினி எதிர்பார்த்தது போலவே நமது அம்மா தொடங்கி வைகைச் செல்வன் வரை இந்த விவகாரத்தை எதிர்மறையாக எடுத்து பேச ஆரம்பித்துள்ளனர். இதன் மூலமாக தான் திமுகவிற்கு மட்டும் அல்ல அதிமுகவிற்கும் எதிரானவன் என்கிற போக்கை ரஜினி வெளிப்படுத்தியுள்ளார்.

Political plan...Rajini - Kamal has Confirm...next vijayakanth

அதோடு மட்டும் அல்லாமல் ரஜினி விஷயத்தில் எப்போதும் கவனமாக இருப்பவர் கமல். ஒரு விஷயத்தில் ரஜினி எடுக்கும் முடிவுக்கு நேர்மாறான முடிவை எடுக்க கூடியவர் கமல். ஆனால் எடப்பாடி தொடர்பான ரஜினியின் விமர்சனத்திற்கு முழு ஆதரவை தெரிவித்து அதிர வைத்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் ரஜினியுடன் இணைந்து செயல்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கமல் கூறியுள்ளார்.

Political plan...Rajini - Kamal has Confirm...next vijayakanth

இதே போல் மக்கள் நன்மைக்காக கமலுடன் இணைந்து செயல்பட தனக்கு தயக்கம் கிடையாது என ரஜினியும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் தேர்தலை கமலுடன் இணைந்து சந்திப்பார் என்கிற யூகம் ஓரளவிற்கு உண்மை என்றாகியுள்ளது. இதனிடையே ரஜினியை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் அரசியல் ஆட்டம் ஆட நினைக்கும் சிலர், அடுத்ததாக விஜயகாந்தை புதுக்கூட்டணிக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர்.

Political plan...Rajini - Kamal has Confirm...next vijayakanth

விஜயகாந்த் விவகாரத்தை பொறுத்தவரை அனைத்தும் தற்போது பிரேமலதா மற்றும் சுதீஷ் எடுக்கும் முடிவு தான். எனவே அவர்களை சந்தித்து பேசினால் புதிய கூட்டணிக்கு ஒரு வடிவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது நேராக வீடு தேடிச் சென்று நலம் விசாரித்தார் ரஜினி. அதே போல் தனது அரசியல் பயணத்தை துவங்கும் முன்பு கமல் விஜயகாந்தை சந்தித்து பேசியிருந்தார். இதன் மூலம் மூன்று பேருக்குள்ளும் ஒரு நல்ல உறவு உள்ளது.

Political plan...Rajini - Kamal has Confirm...next vijayakanth

இந்த உறவு அரசியல் கூட்டணியாக மாற்றப்பட வேண்டும் என்பதற்கு சில தயாரிப்புகளை ரஜினியின் பின்னணியில் உள்ளவர்கள் தீவிரமாக செயல்படுத்தி வருவதாக பேச்சு அடிபடுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios