Asianet News TamilAsianet News Tamil

நன்கொடைகளை அள்ளிய பாஜக…. ஒரே வருஷத்துல 437 கோடி ரூபாய் !!

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 437 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. இது மற்ற கட்சிகளை விட 12 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

 

political parties donation
Author
Delhi, First Published Jan 18, 2019, 6:25 AM IST

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவங்களிடம் இருந்து நன்கொடை பெற்று வருகின்றன. தாங்கள் பெற்ற நன்கொடை பற்றிய விபரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு தேர்தல் ஆணையத்தில்  தாக்கல் செய்யப்பட ஒரு அறிக்கையில் பாஜக தாம் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை தெரிவித்துள்ளது.   பாஜக  மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 'பிரவுண்ட் எலக்ட்ரானிக் ட்ரஸ்ட்' என்ற அமைப்பு மூலம் அதிக நன்கொடைகளை பெற்றுள்ளன. இந்த அமைப்புக்கு பெரிய நிறுவனங்களின் ஆதரவு உள்ளது. இதில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொலைத் தொடர்புத் துறையுடன் தொடர்புடைய பெரிய நிறுவனங்கள் அடங்கும். 

political parties donation

தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்பான தகவலை ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு (ADR) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில் "புரோடென்ட் எலக்ட்ரானிக் டிரஸ்ட்" மட்டும் பாஜக  மற்றும் காங்கிரசுக்கு ரூ. 164.30 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. அதில் பா.ஜ.க. 154.30 கோடி ரூபாய்களை பெற்றுள்ளது. இது மொத்த நன்கொடை நிதியில் 35 சதவீதமாகும். காங்கிரசுக்கு 10 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. 

political parties donation

2017-18 ஆம் ஆண்டு தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை நிதி ரூ.469,89 கோடி ஆகும். அதில் பாஜவுக்கு மட்டும் 437.04 கோடி  ரூபாய் கோடி தரப்பட்டுள்ளது. இது 2,977 நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்டு உள்ளது.  காங்கிரசுக்கு 26.65 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மொத்தம் 777 நன்கொடைகள் மூலம் இது திரட்டபட்டு உள்ளது.

இந்த நன்கொடையில் 90 சதவீதம் கார்ப்பரேட் நிறுவனங்களும், 10 சதவீதம் தனிநபர்களும் கொடுத்துள்ளனர். 2017-18 ஆண்டுகளில் கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாஜவுக்கு 400.23 கோடி ரூபாயை அளித்துள்ளனர். அதேநேரத்தில் காங்கிரசுக்கு 19.29 கோடி ரூபாய் மட்டுமே அளித்துள்ளார்கள்.

தேசியவாத காங்கிரஸ்  ரூ.2.087 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ.2.756 கோடி, இடது கம்யூனிஸ்ட் ரூ.1.246 கோடி, திரிணாமுல் காங்கிரஸ் ரூ.0. 20 கோடி  என நிதி திரட்டி உள்ளன.

ஏடிஆர் அறிக்கையின்படி, காங்கிரஸ்,  தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை நிதியை விட 12 மடங்கு அதிகமான நன்கொடையை  பாஜக பெற்றுள்ளது. தேசிய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் அதிகபட்சமாக தலைநகரம் டெல்லியில் இருந்து கிடைத்துள்ளது.

ரூ.20 ஆயிரத்திற்கு மேற்பட்ட நன்கொடைகளை வாங்கவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்து உள்ளது.

political parties donation

கடந்த 2016-2017 ஆம் ஆண்டு தேசிய கட்சிகள் 589.38 கோடி நிதி திரட்டி இருந்தது. தற்போது அது  20 சதவீதம் குறைந்து உள்ளது.

பாரதீய ஜனதா 36 சதவீதம், காங்கிரஸ் 67 சதவீதம், தேசியவாத காங்கிரஸ் 47 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 20 சதவீதம், இந்திய கம்யூனிஸ்ட் 90 சதவீதம்  குறைந்து உள்ளன.

இந்த தகவல் ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு (ADR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios