Asianet News TamilAsianet News Tamil

கமலுக்கு குவிகிறது அரசியல் தலைவர்களின் பாராட்டு..!

political leaders wish kamal people welfare action
political leaders wish kamal people welfare action
Author
First Published Oct 28, 2017, 12:09 PM IST


ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் கமல்.

டுவிட்டரிலும் தொடர்ந்து அதிமுக அரசுக்கு எதிரான கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார். இதனால் கமலின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சு தமிழகத்தின் ஹாட் டாபிக்காக உள்ளது.

அதே நேரத்தில் அவர் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்ற விமர்சனங்களை ஆட்சியாளர்களும் சில அரசியல் விமர்சகர்களும் முன்வைத்தனர்.

இந்நிலையில், இன்று காலை சென்னை எண்ணூர் துறைமுக கழிமுக பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்த கமல், அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்கள் பிரச்னைக்காக களத்தில் இறங்கியதன் மூலம் தான் டுவிட்டரில் மட்டும் அரசியல் செய்பவன் அல்ல என்பதை மறைமுகமாக நிரூபித்துள்ளார். கமலின் இன்றைய ஆய்வு, அரசியல் பிரவேசத்திற்கான அடித்தளமாகவே பார்க்கப்படுகிறது.

மக்கள் பிரச்னைக்காக முதன்முதலில் நேரடியாக களத்தில் இறங்கியதற்கு கமலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கமல்ஹாசன் தீவிரமான மக்கள் பணியில் ஈடுபட இருக்கிறார் என்பதையே இன்றைய களப்பணி உணர்த்துகிறது. அவர், கொசஸ்தலை ஆற்றைப் பார்வையிடும் பணியில் ஈடுபட்டது வரவேற்கத்தக்கது. கடந்த காலங்களில் திரைத்துறையில் தீவிரமாக பணியாற்றிய கமல்ஹாசன் அதில் முத்திரை பதித்துள்ளார். அதேபோல், அரசியலிலும் அவர் முத்திரை பதிப்பார் என நம்புகிறேன். நடிகர் கமல்ஹாசன் ஆற்றில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் ஆற்றில் நன்றாக நீந்தி கரையேறுவா. கமல்ஹாசனுக்கு எனது பாராட்டுகள் என திருமாவளவன் தெரிவித்தார்.

அதேபோல, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் கமல் ஆய்வு செய்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios