வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் முடிந்த கையோடு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கழன்று கொள்ள முடிவு செய்திருந்த பிரேமலதா தனது முடிவை சடன் ப்ரேக் போட்டு நிறுத்திக் கொண்டுள்ளார். 

அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலை, தே.மு.தி.க., சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு பிறகு கூட்டணியில் இருந்து விலக, விஜயகாந்த் மனைவி பிரேமலதா முடிவு செய்திருந்தார். அதனால் தான், அரசின் நடவடிக்கையை விமர்சித்து அவ்வப்போது விஜயகாந்த் பெயரில் தினமும் அறிக்கை வெளியிட்டு வந்தார்கள். 

தனிப்பட்ட முறையில் ஏ.சி.சண்முகம் கேட்டுக் கொண்டதால்  வேலுார் தொகுதியில்  பிரேமலதா பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். பிரேமலதாவின் நடவடிக்கைகளை பார்த்து ஆளுங்கட்சி தரப்பு கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க.,வை ஓரம் கட்ட ஆரம்பித்தது. இந்த நேரத்தில், வேலுார் தேர்தலில் குறைந்த ஓட்டுகளில் அ.தி.மு.க., கூட்டணி தோல்வியை தழுவியது. 

இதனால் மக்கள் மனதில் மாற்றம் வந்திருப்பதாக  பிரேமலதா நினைக்கிறாராம். ஆகையால் உள்ளாட்சி தேர்தல் வரைக்கும், இந்த கூட்டணியை தொடர பிரேமலதா முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அ.தி.மு.க., தலைமை, என்ன முடிவெடுக்கப்போகிறது எனத் தெரியவில்லை.