Asianet News TamilAsianet News Tamil

ரஜினி ஒரு முதுகெலும்பில்லாத கோழை! அருவருக்கத்தக்க கோர மனிதன்: நாராசமாய் திட்டிய நாஞ்சில் சம்பத் ...

பெரியாரைப் பற்றிப் பேசும் முன் அவரது கொள்கை, தியாகம் என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பேசியிருக்க வேண்டும் ரஜினி. பெரியார் எனும் பெரும் மனிதர் இறந்த 47 ஆண்டுகளான பிறகு இப்போது அவரை விமர்சிக்க வேண்டிய அவசியமென்ன? 
 

political critics nanjil sambath criticized actor rajini like very badly
Author
Chennai, First Published Jan 30, 2020, 7:21 PM IST

’இப்போது எனக்கு இலக்கிய பாதையே திருப்திகரமாக பிடித்திருக்கிறது. அரசியலை விட இலக்கியம் பேசுவதிலேயே உற்சாகம், தெளிவு, கடமை உணர்ச்சி இருக்கிறது!’ என்று சொல்லி, அரசியலை கண்டாலே காறிதுப்புவேன் எனும் ரேஞ்சுக்கு டயலாக் விடுகிறார் பேட்டிகளில் நாஞ்சில் சம்பத். ஆனால் அதே பேட்டிகளில் முழுக்க முழுக்க அரசியல் பேசி, வழக்கம்போல் தனது தற்போதைய நிலைப்பாட்டுக்கு எதிரான மனிதர்களை வகுந்தெடுக்கிறார்.அந்த வகையில் இப்போதைக்கு நாஞ்சில் சம்பத் இருப்பது தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டில். 

political critics nanjil sambath criticized actor rajini like very badly

அந்த வகையில் அதற்கு எதிரான நபரான ரஜினிகாந்தை ச்சும்மா வெச்சு வெளுத்திருக்கிறார், வாரம் இருமுறை வெளிவரும் அரசியல் புலனாய்வு புத்தகம் ஒன்றில். பெரியாருக்கு எதிராக ரஜினி பேசியது பற்றி பதில் சொல்லியிருக்கும் நாஞ்சில் சம்பத் “ பெரியாரைப் பற்றிப் பேசும் முன் அவரது கொள்கை, தியாகம் என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பேசியிருக்க வேண்டும் ரஜினி. பெரியார் எனும் பெரும் மனிதர் இறந்த 47 ஆண்டுகளான பிறகு இப்போது அவரை விமர்சிக்க வேண்டிய அவசியமென்ன? பெரியாரை பற்றி அக்கிரமமாக பேசிய இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன், வருத்தம் தெரிவிக்க மாட்டேன்! என்றும் ரஜினி இவ்வளவு வன்மமாக சொல்கிறார் என்றால் ஏதோ ஒரு பெரிய சக்தி அவரை ஆட்டுவிக்கிறது என்பதுதான் அர்த்தம். அந்த சக்தியின் பின்புலத்தில்தான் இந்த முதுகெலும்பில்லாத கோழை மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்க முடியாது என பேசுகிறார். 

political critics nanjil sambath criticized actor rajini like very badly
மன்னிப்பு கேடபதும், வருத்தம் தெரிவிப்பதும் ஒரு மனிதனின் பண்பு. அந்த அழகான பண்பு கூட இல்லாத அருவருக்கத்தக்க கோர மனிதன் ரஜினிகாந்த். நக்குகிற நாய்க்கு செக்கு என்றும் தெரியவில்லை, சிவலிங்கம் என்றும் தெரியவில்லை.” என்று வெளுத்தவர் பின்....“இந்திய அரசியலி, கட்டமைப்பு கொள்கை உறுதி மற்று பிரசார பலம் ஆகியவற்றில் முதலிடத்தில் இருக்கிறது  தி.மு.க. சாதுர்யமான வேலை திட்டங்களும், வேலை வாங்குகிற வல்லமை கொண்ட தலைமையும் அக்கட்சியில் இருக்கிறது. 

எனவே இப்போதே தமிழக வாக்காளர்கள் தி.மு.க.வுக்கு வெற்ரியை அளிக்கத் தீர்மானித்துவிட்டார்கள். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. அந்த சலப்பு என்பது ஊடல் கூட கிடையாது, வெகு சாதாரண  மற்றும் வழக்கமாக கூட்டணிக்குள் வரும் விஷயம்தான். எனவே இவர்களுக்கு வெற்றி உறுதி.” என்று முடித்திருக்கிறார் நாஞ்சில். 
ஓ இதுக்கு பேர்தான் இலக்கியம் பேசுதலோ?!

Follow Us:
Download App:
  • android
  • ios