சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஒருவரை ரவுடிகள் சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை அருகே பூந்தமல்லியில் அன்பழகன்  என்ற காவலர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது   அந்த வழியே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது.  அதில் 3 பேர் வந்துள்ளனர்..

இதனை தொடர்ந்து அவர்களை அன்பழகன் தடுத்து நிறுத்தியுள்ளார்.  அவர்களிடம் அன்பழகன் விசாரணை நடத்த முற்பட்டபோது  ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த அந்த 3 பேரும் காவலரை அரிவாளால் வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த அன்பழகன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக ஆக்சனில் இறங்கிய போலீசார் சிசிடிவி கேமராவை வைத்து அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்தனர்

அவர்கள் மூவரும் அப்பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், சுதீஷ்குமார் மற்றும் ரஞ்சித்  என்ற ரவுடிகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.