Asianet News TamilAsianet News Tamil

பாஜக வேல் யாத்திரையில் பங்கேற்ற 1000 பேருக்கு போலீஸ் வைத்த ஆப்பு..!

பாஜக வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில் திருச்செந்தூரில் பங்கேற்ற 300 பெண்கள் உள்ளிட்ட 1000 பேர் மீது போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

Police wedge 1000 people who participated in BJP Vel pilgrimage ..!
Author
Tamil Nadu, First Published Dec 8, 2020, 6:30 PM IST

பாஜக வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில் திருச்செந்தூரில் பங்கேற்ற 300 பெண்கள் உள்ளிட்ட 1000 பேர் மீது போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Police wedge 1000 people who participated in BJP Vel pilgrimage ..!

தமிழக பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா திருச்செந்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், முன்னணி நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, இல,கணேசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, குஷ்பு, கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Police wedge 1000 people who participated in BJP Vel pilgrimage ..!

மண்டபத்துக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் இருந்த நிலையில், மண்டபத்துக்கு வெளியே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக தொண்டர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். இந்நிலையில் கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதாக பாஜகவினர் மீது திருச்செந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தடையை மீறி கரோனோ நோய் பரவும் விதத்திலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வேல்யாத்திரை நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டதை நடத்தியதாக அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147, 188, 269 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios