கூவத்தூரில் அடுத்த சட்டமன்ற புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடந்து முடிந்தது. சசிகலாவை கைது செய்ய போலீசார் கூவத்தூரில் காத்திருக்கின்றனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து 4 ஆண்டு சிறை 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்பதால் சசிகலாவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது.
4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு 10 கோடி ரூபாய் அபராதம் வழங்கப்பட்டுள்ளதால் சசிகலா இனி முதல்வராக முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அவர் சரணடைய வேண்டும் என்பதால் அவரை கைது செய்ய போலீசார் ரிசார்டுக்குள் நுழைந்துள்ளனர்.
4 ஆண்டு தண்டனை ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து அவர் உடனடியாக இன்று மாலைக்குள் பெங்களூரு நீதிமன்ற அறை எண் 48 தனி கோர்ட்டு நீதிபதி அஷோக் நாராயணனிடம் சரணடைய வேண்டும் என பெங்களூரு நகர சிவில் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழக போலீஸ் அவரை கைது செய்து டிரான்சிட் வாரண்ட் பெற்று கர்நாடக போலீசாரிடம் ஒப்படைப்பார்கள் என்றும் கர்நாடக போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதே போல் போயஸ் இல்லத்தில் தங்கியிருக்கும் இளவரசியும் போலீசாரால் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
