Asianet News TamilAsianet News Tamil

அமர் பிரசாத் ரெட்டியை தொடர்ந்து அண்ணாமலையை குறி வைக்கும் போலீஸ்..!அதிர்ச்சியில் பாஜக நிர்வாகிகள்

அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில், நாளை மறுதினம் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அண்ணாமலையை போலீசார் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

Police plan to investigate Annamalai who spoke to create religious conflict KAK
Author
First Published Nov 2, 2023, 11:30 AM IST | Last Updated Nov 2, 2023, 4:15 PM IST

அண்ணாமலை மீது புகார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, யூடியூப் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்து கலாசாரத்த அழிப்பதற்காக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகள் வெளிநாட்டில் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வழக்கு போடுவதாக கூறியிருந்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அதில் பட்டாசு வெடிக்க கூடாது என  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் இந்து மதத்தை சேர்ந்த அர்ஜூன் கோபால் என்பது தெரிந்தது. அண்ணாமலை வேண்டும் என்றே இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய் தகவலை பரப்பியுள்ளார். 

Police plan to investigate Annamalai who spoke to create religious conflict KAK

தமிழக அரசு ஒப்புதல்

ஆகவே, அண்ணாமலை மீது இந்திய தண்டனை சட்டம் 153,505 (3), 120 ஏ மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் 156(3), 200 ஆகியவற்றின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில், நீதிமன்றத்தை அனுகினார். அப்போது தமிழக அரசின் அனுமதியை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆலோசித்த தமிழக அரசு வழக்கறிஞர் வழக்கை பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக கூறி ஒப்புதல் வழங்கியது.

கடந்த 18 ஆம் தேதி இந்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், வரும் நவம்பர் 4 ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே அண்ணாமலையின் வலது கரமாக இருந்த அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Police plan to investigate Annamalai who spoke to create religious conflict KAK

நீதிமன்றத்தில் நாளை மறுதினம் வழக்கு

இதனையடுத்து அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு காவல்நிலையத்தில் ஆஜராகும் படி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு இருப்பதாகவும்  தெரிகிறது. 

இதையும் படியுங்கள்

சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்காதது ஏன்.? ஆளுநர் மாளிகை தான் விளக்கம் அளிக்கனும் - அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios