டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட உணவுத்துறை அதிகாரியின் உடலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து உள்ளதாக பிரேத பரிசோதனையில்  தெரியவந்துள்ளது .  மிகக் கொடூரமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .  கொலைக்கு காரணமான நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் .  இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு போராட்ட குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் டெல்லியில் கலவரத் தீ மூண்டது ,  வடகிழக்கு டெல்லியில் பற்றிய கலவரத்தை அடுத்து  அது மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது . அதில்  38 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இந்நிலையில் அதில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உளவுத்துறை காவல் அதிகாரி அங்கிட சர்மா உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது  காரணம் அவரது உடலில் சுமார் 400க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து நடந்திருப்பதே அதற்கு காரணம் , டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க  காவல்துறையில் இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அத்துடன் கலவரம் நடந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து சென்ற வண்ணம் உள்ளனர் .  இந்நிலையில் உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் உடலில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது,  இது குறித்து தெரிவித்த மருத்துவர்கள் ,   அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது , அதைக் கண்டு  அதிர்ச்சி அடைந்தோம்  இதுவரை இப்படிப்பட்ட ஒரு கொடூரமான கொலையை  எங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை .  என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன்மூலம் அன்கிட் சர்மாவை  வன்முறை கும்பல் நீண்ட நேரம் சித்திரவதை செய்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.  டெல்லி சந்துபாக் பகுதியை சேர்ந்த அங்கிட் சர்மா  2017 ஆம் ஆண்டிலிருந்து உளவுத் துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார் . வன்முறை  நடந்த அன்று மாலை வீடு திரும்பிய அங்கிட சர்மா ,  நிலைமையை அறிந்துவர களவர பகுதிக்கு சென்றுள்ளார்,  அப்போது அவரை சுற்றிவளைத்த வன்முறை கும்பல் அவரை கடுமையாகத் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொன்று உடலை கால்வாயில் வீசிச்சென்றுள்ளது,   இந்நிலையில் அதற்கு மறுநாளே அவரது உடல் மீட்கப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது .