Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் ஆதரவாளரிடம் இருந்து பணத்தை ஆட்டைய போட்ட ஓட்டுனர்..! தட்டி தூக்கிய போலீஸ்..! ரகசிய இடத்தில் விசாரணை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் திருடிக் கொண்டு சென்றதாக புகார் அளிக்கப்பட்ட ஸ்ரீதர் என்பவரை  தேனி மாவட்ட போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Police have arrested a man who stole money from an OPS supporter in Theni
Author
First Published Sep 4, 2022, 12:57 PM IST

ஓபிஎஸ் ஆதரவாளரிடம் பணம் திருட்டு

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதிமுகவில் பெரும்பாலான நிர்வாகிகள் தங்களுக்கு தான் ஆதரவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து  வருகிறார். ஆனால் ஓபிஎஸ் தரப்போ தொண்டர்களின் ஆதரவு தான் முக்கியம் என கூறிவருகிறது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகளை ஓபிஎஸ் தரப்பினர் விலை பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து  உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் கடந்த வாரம் ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் புதிதாக புகார் ஒன்று தேனி மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.  அதாவது உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பனுக்கு 3 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட நிலையில் அதனை கொடுக்க கொண்டு சென்ற ஓபிஎஸ் ஆதரவாளரும்  தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் நாராயணனின் ஓட்டுநர் ஶ்ரீதர் பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டதாக தகவல் பரவியது.

தேர்வர்கள் கவனத்திற்கு!! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.. முக்கிய அறிவிப்பு

Police have arrested a man who stole money from an OPS supporter in Theni

ஓட்டுநரை கைது செய்த போலீஸ்

இதனையடுத்து  நாராயணனின் கார் ஓட்டுனரான ஸ்ரீதர் என்பவரை கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி முதல் காணவில்லை எனவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று ஆகஸ்டு 27ம் தேதி இரவு 10 மணிக்கு அவரது மனைவி கெங்கம்மாள் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தனது கார் ஓட்டுனரான ஸ்ரீதர் தன்னிடமிருந்து 50 லட்சம் ரூபாய் திருடிச் சென்று விட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளரும்  தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன் கடந்த ஆகஸ்டு 29 ம் தேதி தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து  ஶ்ரீதரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில், 50 லட்சம் ரூபாயை திருடிக்கொண்டு சென்றதாக கூறப்பட்ட ஶ்ரீதரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து ஶ்ரீதரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பள்ளிகளில் தொழிற்கல்வி ரத்து..? நல்ல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தும் அரசாக தி.மு.க. அரசு..! ஓபிஎஸ் ஆவேசம்

Follow Us:
Download App:
  • android
  • ios