Asianet News TamilAsianet News Tamil

பொறிக்குள் சிக்கிய எலியாய் வாண்டடாக வந்து சிக்கிய தயாநிதி மாறன்... கைது செய்ய பக்கவாக ஸ்கெட்ச் போடும் பாஜக..?

தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து இழிவாக பேசிய திமுக எம்.பி.தயாநிதி மாறனை கைது செய்ய தமிழக பாஜக தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

police complaint...dmk mp Dayanidhi Maran arrest plan in bjp
Author
Tamil Nadu, First Published May 20, 2020, 12:04 PM IST

தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து இழிவாக பேசிய திமுக எம்.பி.தயாநிதி மாறனை கைது செய்ய தமிழக பாஜக தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகத்தை கடந்த மே 13ம் தேதி ஒருங்கிணைவோம் வா திட்ட மனுக்கள் கொடுப்பது தொடர்பாக சந்தித்த திமுக எம்.பி.க்கள் வெளியே வந்து, தலைமைச் செயலாளர் எங்களை அவமதித்துவிட்டார் என்று புகார் கூறினார்கள். அதிலும், குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை தொகுதி எம்.பி.யுமான தயாநிதிமாறன், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல நடத்தினார் என்று சொன்னது பெரும் சர்ச்சையானது. இதற்கு திமுக கூட்டணி தலைவர் திருமாவளவன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதற்கு மே 14-ம் தேதி தயாநிதிமாறன் தனது ட்விட்டர் பதிவில் வருத்தம் தெரிவித்தார்.

police complaint...dmk mp Dayanidhi Maran arrest plan in bjp

 

அதற்குப் பிறகும் தயாநிதிமாறனுக்கு எதிராக நடவடிக்கை கோரி புரட்சி பாரதம் உள்ளிட்ட பட்டியலின மக்களுக்காக போராடும் கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில், இந்தப் பிரச்சனையில் தயாநிதிமாறனுக்கு எதிராக பாஜக தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. தலைமைச் செயலாளர் மீது புகார் கூறியதோடு நாடாளுமன்ற சபாநாயகர் வரை அவர் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவருவதற்குக் கடிதம் எழுதிய தயாநிதி மாறனையும், டி.ஆர்.பாலுவையும் அதிமுகவினரை விட பாஜகவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 

police complaint...dmk mp Dayanidhi Maran arrest plan in bjp

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு காவல்நிலையங்களில் தயாநிதிமாறனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யும்படி பாஜகவின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் புகார் அளித்துள்ளனர். அதேபோல், கோவை பி3 காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். மேலும், தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி ஆகியோரை சந்தித்து பாஜக தலைவர்கள் மே 18ம் தேதி நேரில் மனு அளித்துள்ளனர்.

police complaint...dmk mp Dayanidhi Maran arrest plan in bjp

இந்நிலையில், தற்போதைய பாஜக தலைவர் எல். முருகன் ஏற்கனவே எஸ்சி.எஸ்டி ஆணைய துணைத் தலைவராக இருந்தவர். அவரது உத்தரவின் பேரில்தான் மாநிலம் முழுதும் தயாநிதிமாறன் மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தயாநிதிமாறனை கைது செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios